நீர்நிலைப் பகுதிகளில் குடியிருப்பவர்களுக்கு மாற்று இடத்தில் வீடு

இராணிப்பேட்டை மாவட்டத்தில் நீர்நிலைப் பகுதிகளில் குடியிருப்பவர்களுக்கு மாற்று இடத்தில் வீடு வழங்கப் படுவதாக கலெக்டர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் அறிவித்துள்ளார்.

Update: 2021-08-27 05:29 GMT

இராணிப்பேட்டை மாவட்டம் மேல் விஷாரம் பகுதியில் கலெக்டர் புஷ்பராஜ் ஆய்வுகளை மேற்கொண்டார்

இராணிப்பேட்டை மாவட்டம் மேல் விஷாரம் பகுதியில் கலெக்டர் புஷ்பராஜ் ஆய்வுகளை மேற்கொண்டார். அப்போது அருகிலுள்ள கத்தியவாடியில் 2ஏக்கர் பரப்பில் ஆட்சேபனைக்குரிய நீர்நிலை புரம்போக்கு இடம் உள்ளது .

அதில் 4குடும்பத்தினர் வீடுகட்டி வசித்து வருகின்றனர். ஆக்கிரமிப்புகளான அவற்றை அகற்றுவது தொடர்பாக உயர்நீதி மன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டள்ளது.

எனவே,4குடும்பத்தினர்களின் ஆக்கிரமிப்பை அகற்றி அவர்களுக்கு குடிநீர்,சாலை,மின்சார வசதி அடிப்படை வசதிகளுடன் வீடுகட்டி,,பட்டா வழங்குவதற்கான மாற்று இடத்தை பார்வையிட்டு மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார். ,பின்னர் , பணிகளை விரைந்து முடிக்கும்படி உத்தரவிட்டார்.

மேலும் , அதேபகுதியில் நடந்த கொரோனா தடுப்பூசிமுகாமிற்கு சென்று பொதுமக்களிடம. தடுப்பூசி பொட்டுக்கொள்ள அச்சப்படவேண்டாம் என்று்  பேசினார்.

அப்போது ,மக்கள் தங்கள் பகுதியில் நியாய விலைக்கடை திறக்க வேண்டி கோரிக்கை வைத்தனர். நடவடிக்கை எடுப்பதாக கூறினார் .

Tags:    

Similar News