6வதுமெகா கொரோனா தடுப்பூசிமுகாமில் 21685 பேருக்கு தடுப்பூசி

இராணிப்பேட்டை மாவட்டத்தில் நடந்த 6வது தடுப்பூசி முகாமில் ஒரேநாளில் 21685 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது

Update: 2021-10-23 16:13 GMT

தடுப்பூசி முகாமில் ஆய்வு மேற்கொண்ட கலெக்டர்

தமிழகத்தில் கொரோனா தொற்று நடவடிக்கையாக பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணிகளை தீவிரப்படுத்திவருகிறது. அதன் அடிப்படையில் வாரந்தோறும் ஞாயிற்றுக் கிழமைகளில் மெகாத் தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகஅரசு தடுப்பூசி முகாமைஞாயிற்றுக்கிழமைக்குப் பதிலாக சனிக்கிழைகளில் நடத்த முடிவுசெய்து அறிவித்தது.

எனவே , இராணிப்பேட்டை மாவட்டத்தில் சுகாதாரத்துறையினர் அனைத்து சுகாதார வட்டாரங்களுக்குட்பட்ட பேருந்து லையங்கள், நிறுத்தங்கள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் முகாம்களை வழக்கம்போல அமைத்து   கொரோனா தடுப்பூசியினை பொதுமக்களுக்குப் போட்டனர் . அதில் காவேரிப்பாக்கம், திமிரி, ஆற்காடு மற்றும் பல இடங்களில் சுகாதாரத் துறையினர் மாற்றுத் திறனாளிகள், முதியோர் உள்ளிட்ட பலருக்கு அவர்கள் வீட்டிற்கே சென்று தடுப்பூசியைபோட்டனர். 

மேலும், இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் பாஸ்கரப்பாண்டியன் முகாம் நடந்த இடங்களுக்கு நேரில்சென்று ஆய்வு செய்தார் . ஆய்வின்போது மாவட்டாட்சியர் பொதுமக்களிடம்  கொரோனா தடுப்பூசி ஒன்றே நோய் பரவலை ஒழிக்கும். எனவே, கொரோனாவிலிருந்து முற்றிலும் விலக்கி பாதுகாப்பு அரனாக விளங்குவது தடுப்பூசி மட்டுமே என்றும் 1வது,2வது தடுப்பூசிகளை கட்டாயம் போட்டுக்கொள்ள வேண்டும். ,ஊசி போட்டுக்கொள்வதால் பாதிப்புகள் வராது என்று அவர்  விளக்கினார்..

இராணிப்பேட்டை மாவட்டத்தில் மெகாத்தடுப்பூசிமுகாம் காலை7மணிக்கு தொடங்கி இரவு 7மணி வரை நடந்தது. அதில், மாவட்டமுழுவதும் 21685 பேருக்கு கொரோனாதடுப்பூசி போட்டுள்ளதாக மாவட்ட சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News