நடமாடும் கொரோனா தடுப்பூசி திட்டத்தில் 1985 பேருக்கு தடுப்பூசி

இராணிப்பேட்டை மாவட்டத்தில் நடமாடும் தடுப்பூசி திட்டத்தில் 1985 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

Update: 2021-09-29 05:06 GMT

இராணிப்பேட்டையில் நடமாடும் தடுப்பூசி திட்டம் மூலம் தடுப்பூசி போடப்படுகிறது

இராணிப்பேட்டை மாவட்டத்தில் கலெக்டர் பாஸ்கரப்பாண்டியன் தலைமையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் மாவட்டத்தில் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

மேலும் அரசு உத்தரவின் பேரில் வாரந்தோறும் ஞாயிற்றுக் கிழமைகளில் நடந்து வரும் மெகா கொரோனா தடுப்பூசி முகாம்களில் இதுவரை 1லட்சத்து2ஆயிரத்து666பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

இந்நிலையில், தடுப்பூசி போடும். பணிகளை அதிகபடுத்த கலெக்டர் பாஸ்கரபாண்டியன் தலைமையில் அதிகாரிகளுடன் நடைபெற்ற  ஆலோசனை கூட்டத்தில், வாரநாட்களிலும் தடுப்பூசிபோடும் பணிகளை, ,நகராட்சிகள், பேரூராட்சிகள்,மற்றும் ஊராட்சிகளில் உள்ள வீடுகளுக்கு நேரடியாகச் சென்று கொரோனா தடுப்பூசிப் போட்டுக் கொள்ளாதவர்களைக் கண்டறிந்து தடுப்பூசி போடும் விதமாக நடமாடும் தடுப்பூசி திட்டத்தை அறிவித்தார்.

அதனடிப்படையில் சுகாதாரத்துறையினர், மாவட்டம் முழுவதும் 45வாகனங்களில்  ஒவ்வொன்றிலும் மருத்துவர், செவிலியர்,  மருத்துவ உதவியாளர், மற்றும் பணியாளர. அடங்கிய குழுவினர் அம்மூர், வேலம், வடகடப்பந்தாங்கல், நெமிலி,  காவேரிப்பாக்கம், பணப்பாக்கம், உள்ளிட்ட மாவட்டத்தின் அனைத்து பகுதிகளில் வீடுவீடாகச் சென்று விபரங்களை சேகரித்து தடுப்பூசிபோட்டனர். 

அப்போது, பொதுமக்களிடம், சர்க்கரைநோய், இரத்தழுத்தப் பரிசோதனைகள் நடந்து மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் தடுப்பூசி போடப்பட்டது.இத்திட்டத்தின் கீழ் இராணிப்பேட்டை மாவட்டம்முழுவதும் 1985 பேருக்கு தடுப்பூசி போட்டுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News