மகளிர் தினத்தை முன்னிட்டு 100% வாக்களிப்பு உறுதி மொழி ஏற்பு

மகளிர் தினத்தை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் மகளிர் சுய உதவி குழுவினர் 100% வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

Update: 2021-03-08 09:11 GMT

மகளிர் தினத்தினை உலகம் முழுவதும் இன்று கொண்டாடப்பட்டு வருகின்றன.மகளிர் தினத்தை முன்னிட்டு ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் மகளிர் சுய உதவி குழுவினர் 100% வாக்களிப்பை வலியுறுத்தி உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

 ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மகளிர் சுய உதவிக் குழுவினர் மூலமாக மகளிர் தேர்தல் விழிப்புணர்வு முகாம் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் தலைமை தாங்கினார். மேலும் வருகின்ற சட்டமன்ற தேர்தலின்போது 100% வாக்களித்து தங்களது ஜனநாயக கடமைகளை நிறைவேற்ற வேண்டுமென உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது.

 இதனை தொடர்ந்து பெண்களுக்கான மாதிரி வாக்குப்பதிவு பயிற்சி மையத்தை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார். இதில் மகளிர் குழுக்களை சார்ந்த  பெண்கள் வரிசையில் நின்று  தங்களது மாதிரி வாக்கினை செலுத்தி பயிற்சி பெற்றனர்

 இந்த நிகழ்ச்சியின் போது துணை ஆட்சியர் உமா, மாவட்ட வருவாய் துறை அலுவலர் ஜெயசந்திரன், சார்-ஆட்சியர் இளம்பகவத் உட்பட பல துறை அரசு அதிகாரிகள் மற்றும் மகளிர் சுய உதவி குழுவினர் பங்கேற்றனர்.

Tags:    

Similar News