திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி தேர்தல் பரப்புரை

திமுக பொது செயலாளருக்கு, திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்.

Update: 2021-03-16 16:53 GMT

ராணிப்பேட்டை மாவட்டம் ராணிப்பேட்டை சிப்காட் அடுத்த லாலாபேட்டை பகுதியில் வேலூர் மாவட்டம் காட்பாடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் தொகுதி திமுக வேட்பாளர் மற்றும் திமுக கட்சியின் பொது செயலாளராக இருக்கும் துரைமுருகன் அவர்களை ஆதரித்து திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்.

இந்த தேர்தல் பரப்புரையின் போது உரையாற்றிய உதயநிதி வருகின்ற சட்டமன்ற தேர்தலில் இந்த தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் அவர்களை ஆதரித்து உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்கும்படி கேட்டுக்கொண்டார். இந்த பரப்புரையின் போது திமுக தலைவர் ஸ்டாலின் தேர்தல் அறிக்கை குறித்து மக்களுக்கு எடுத்துரைத்தார், பின்னர் போட்டியிடும் வேட்பாளர் அவர்கள் தொகுதிக்கு 8 முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். காவிரி குடிநீர் திட்டத்தை கொண்டு வந்தவரும், 1984-ஆம் ஆண்டு முதல் கட்சிக்காகவும் தொகுதி மக்களுக்காகவும் உழைத்துக் கொண்டிருப்பவர் துரைமுருகன் என்றார்.

Tags:    

Similar News