தரமான கல்வி மற்றும் மருத்துவத்தை தனியாரால் வழங்க முடியும்போது அரசால் முடியாதா? என சீமான் பேச்சு.

8 கோடி மக்களுக்கு அரசு நடத்தும் மருத்துவமனை மற்றும் பள்ளி தரமற்றதாக உள்ளது. தனியார் நடத்தும் மருத்துவமனை, பள்ளி தரம் உயர்ந்து உள்ளது. தரமான கல்வி மற்றும் மருத்துவத்தை தனியாரால் வழங்க முடியும்போது அரசால் முடியாதா? என சீமான் பேச்சு.

Update: 2021-03-10 19:04 GMT

ராணிப்பேட்டை முத்துக்கடை பேருந்து நிலையத்தில் ஆற்காடு தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர்  கதிரவன் மற்றும் ராணிப்பேட்டை சட்டமன்ற தொகுதி வேட்பாளர் சைலஜா ஆகியோரை ஆதரித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பரப்புரை மேற்கொண்டார்.

இந்த பரப்புரையின் போது, மருத்துவத்துறையும் கல்வித்துறையும் அரசு நடத்தி வருகிறது அந்த அரசு மருத்துவமனையில் சிகிச்சை சரிவர கிடைப்பதில்லை என்பதால்  தனியார் மருத்துவமனைக்கு செல்கின்றனர் அதைப்போல் அரசு பள்ளி கல்லூரிகள் தரம் இல்லாததால் அரசியல்வாதிகள் முதல் அரசு அதிகாரிகள் வரை அனைவரும் தனியார் பள்ளி கல்லூரிகளுக்கு செல்கின்றனர். ஒரு தனியார் முதலாளியால் தரமான மருத்துவம் மற்றும் கல்வி தரமுடியும் எனும்போது ஒரு அரசால் தரமான மருத்துவம் கல்வி தர முடியாது என்றால் அந்த அரசு எதற்கு? என கடுமையாக குற்றம் சாட்டிய அவர் இந்த இரண்டு துறைகளிலும் மாற்றத்தை உருவாக்குவதே தனது நோக்கமாகும் என்று தெரிவித்தார்.

அதைத் தொடர்ந்து தமிழகத்தில் குடிதண்ணீரை வியாபார நோக்கத்துடன் பயன்படுத்தி வருகின்றனர். இதனால் நிலத்தடி நீர்மட்டம் வறண்டு விட்டது என்று கூறினார். தனது சமூகம் உயர்ந்த சமூகமாக, முன்னேறிய சமூகமாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதாகவும் ஆனால் வாக்காளர் நீங்களோ ஓட்டு போடுங்கள் அல்லது ஓட்டு போடாமல் இருங்கள் இரட்டை இலைக்கு வாக்களியுங்கள் அல்லது திமுகவிற்கு வாக்களியுங்கள் இதனால் எந்த கஷ்டமும் இல்லை குஷ்டம் தான் வரும் என்று நகைச்சுவையுடன் தெரிவித்தார்.

சிந்தித்து வாக்களியுங்கள்.  50 ஆண்டுகளாக இரண்டு கட்சிகளுக்கும் மாறி மாறி  அளித்த வாக்கு எந்த முன்னேற்றத்தையும், எந்த பலனையும் இதுவரை தரவில்லை.அந்தக் கட்சிகள் 1000, 2000 தருவதாகத் தான் உள்ளார்கள. எப்படியாவது மக்களை ஏமாற்றி ஆட்சி நடத்த வேண்டும் என்று இருக்கிறார்கள். இதை முற்றிலும் மாற்ற வேண்டும் என்று நினைக்கிறேன். எனவே அனைவரும் சிந்தித்து நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள விவசாய சின்னத்தில் வாக்களிக்கும்படி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

Tags:    

Similar News