பட்டாக் கத்தியால் கேக் வெட்டி கொண்டாடிய இளைஞர்கள் கைது

பெரம்பலூரில் இளைஞர்கள் சாலையின் குறுக்கே மோட்டார் சைக்கிளை நிறுத்தி பட்டாக்கத்தியால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம்.

Update: 2021-07-31 09:00 GMT

பட்டாக் கத்தியை கொண்டு கேக் வெட்டி இளைஞர்கள் கைது.

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை பஸ் நிறுத்தத்தில் இளைஞர்கள் சாலையின் குறுக்கே மோட்டார் சைக்கிளை நிறுத்தி பிறந்தநாள் கொண்டாடினார்கள். அப்போது பிறந்தநாள் கேக்கை மோட்டார் சைக்கிள் மீது வைத்து பட்டாக்கத்தியால் கேக் வெட்டி, மது அருந்திக் கொண்டு கொண்டாடினார்கள். இதனை அந்த பகுதியில் இருந்தவர்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.

மேலும் இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. பின்னர் இது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியானது. இதனைத்தொடர்ந்து அரும்பாவூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் வேப்பந்தட்டையை சேர்ந்த சேட்டு மகன் ஹரி (வயது 24) என்பவர் பிறந்தநாள் கொண்டாடியது தெரியவந்தது. மேலும் அவருடன் அவரது நண்பர்கள் தொண்டப்பாடியை சேர்ந்த சூர்யா (25), வேப்பந்தட்டையை சேர்ந்த ஜனா (24), பிரபாகரன் (23) ஆகியோர் சேர்ந்து கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடியது தெரியவந்தது.

பின்னர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஹரி, ஜனா, சூர்யா ஆகிய 3 பேரை நள்ளிரவில் கைது செய்தனர். தப்பியோடிய பிரபாகரனை வலைவீசி தேடி வருகின்றனர். மேலும் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் வேறு யாரேனும் இளைஞர்கள் கலந்து கொண்டனரா? என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். வேப்பந்தட்டையில் பட்டா கத்தியுடன் நடுரோட்டில் இளைஞர்கள் பிறந்தநாள் கேக் வெட்டி கொண்டாடிய சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News