பேருந்திலிருந்து தவறி விழுந்து உயிரிழந்த பெண்: நீதிகேட்டு உறவினார்கள் சாலை மறியல்

கவனக்குறைவால் பேருந்தில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்ததாக வாக்குமூலம் பெற்று வழக்கு பதிவு செய்துள்ளனர்

Update: 2021-09-22 07:56 GMT

ஓடும் நகர பேருந்திலிருந்து விழுந்து உயிரிழந்த, பெண்ணுக்கு நீதி கேட்டு வி.சி.க உள்ளிட்ட உறவினார்கள் சாலை மறியல் போராட்டம்.

ஓடும் நகர பேருந்திலிருந்து விழுந்து உயிரிழந்த, பெண்ணுக்கு நீதி கேட்டு வி.சி.க மற்றும் பெண்ணின் உறவினார்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பெரம்பலூர் துறைமங்கலம் பகுதியில் பேருந்தில் இருந்து எச்சில் துப்புவதற்காக வாசற்படிக்கு வந்த மூதாட்டி பேச்சியம்மாள் பேருந்திலிருந்து தவறி விழுந்து தலையில் அடிப்பட்டு , நேற்று  உயிரிழந்தார். இந்த சம்பவத்தில், பெரம்பலூர் போலீசார் பேச்சியம்மாளின் கவனக் குறைவால்தான்  பேருந்தில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்தார் என பேருந்து பயணிகள் மற்றும் ஓட்டுநர், நடத்துனரிடம்  வாக்குமூலம் பெற்று வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இதனை கண்டித்து, அரசு பேருந்து ஓட்டுநர், நடத்துனர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும்,  பெண்ணின் மரணத்துக்கு நீதிகேட்டும் விடுதலை சிறுத்தை கட்சியினர் மற்றும் இறந்து போன பேச்சியம்மன் உறவினர்கள் என 30-க்கும் மேற்பட்டவர்கள் பெரம்பலூர் அரசு மருத்துவமனை அருகே துறையூர் சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.

இனால், துறையூர் - பெரம்பலூர் சாலையில் அரை மணி நேரத்திற்கும் மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும், அரசு பேருந்தில் இருந்த விழுந்த பேச்சியம்மாளுக்கு நஷ் டஈடு வழங்க வேண்டும் என வலியுறுத்தி  கண்டன முழக்கமிட்டனர்,  சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறை ஆய்வாளர் முருகேசன் மற்றும் உதவி காவல் ஆய்வாளர் செல்வராஜ் ஆகியோர் இந்த வழக்கு தொடர்பாக உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததன்பேரில், சாலை மறியல் கைவிடப்பட்டது.

Tags:    

Similar News