வாக்காளர் பட்டியல் திருத்த முகாம்களில் விழிப்புணர்வு துணி பை வினியோகம்

பெரம்பலூர் மாவட்ட வாக்காளர் பட்டியல் திருத்த முகாம்களில் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துணி பை வினியோகம் செய்யப்பட்டது.

Update: 2021-11-13 14:23 GMT

பெரம்பலூர் மாவட்டத்தில் நடந்த வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த முகாமிற்கு வந்தவர்களுக்கு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துணி பை வழங்கப்பட்டது.

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டம்,நாட்டார்மங்கலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி வாக்குச்சாவடி மையங்களில் சிறப்பு முகாம் நடைபெற்றது.

இம்முகாமில் பெயர் சேர்த்தல் படிவம்-6,பெயர் நீக்க படிவம்-7,வாக்காளர் அட்டை பதிவுகளில் திருத்தம் மேற்கொள்ளும் படிவம்-8,ஒரே சட்டமன்ற தொகுதிக்குள் முகவரி மாற்றம் செய்யும் படிவம்-8A வழங்க வந்த நபர்களிடம் "என் ஓட்டு விற்பனைக்கு அல்ல"என்ற விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துணிப்பைகளை ஆலத்தூர் வருவாய் வட்டாட்சியர் முத்துகுமரன் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இதில் துணை வட்டாட்சியர் (தேர்தல்) கதிர்,செட்டிகுளம் வருவாய் ஆய்வாளர் ரெங்கநாதன்,கிராம நிர்வாக அலுவலர் பாலுசாமி மற்றும் நாட்டார்மங்கலம் நம்மால் முடியும் நண்பர்கள் குழு இளைஞர்கள் விஜய்அரவிந்த்,அபிநாத்,சக்திவேல்,பிரசாந்த் உள்ளிட்ட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

இதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் நாட்டார்மங்கலம் நம்மால் முடியும் நண்பர்கள் குழு சேர்ந்த இளைஞர்கள் செய்திருந்தனர்.

Tags:    

Similar News