கோல்டன் கேட்ஸ் வித்யாஷ்ரம் பள்ளியில் விருச்சுவல் ஸ்போர்ட்ஸ் விழா

பெரம்பலூர் கோல்டன் கேட்ஸ் வித்யாஷ்ரம் பள்ளியில், இணையதளம் வாயிலாக விருச்சுவல் ஸ்போர்ட்ஸ் விழா நடைபெற்றது.

Update: 2021-09-26 00:30 GMT

பெரம்பலூர் வெங்கடேசபுரம் கோல்டன் கேட்ஸ் வித்யாஷ்ரம் மேல்நிலைப்பள்ளியில் காணொளி மூலம்  நடந்த விருச்சுவல் ஸ்போர்ட்ஸ் விழாவில் வெற்றி பெற்றவர்கள்.

தமிழகத்தில் கொரோனோ தொற்று காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.  மாணவர்களையும் பெற்றோர்களையும் உற்சாக படுத்தும் விதமாக, இணையதளம் மூலம் விருச்சுவல் ஸ்போர்ட்ஸ் எனப்படும், விளையாட்டுப் போட்டிகள், பெரம்பலூர் வெங்கடேசபுரம் கோல்டன் கேட்ஸ் வித்யாஷ்ரம் பள்ளியில் நடைபெற்றது.

இதில்,  வகுப்பு வாரியாக ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பெட்டியை தாண்டுதல், நொண்டி அடித்தல், கயிறு தாண்டுதல், கைகொட்டி பந்து பிடித்தல், சாக்கு ஓட்டம், பந்து உதைத்தல் ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் பெற்றோர்களும், மாணவர்களும்  வீட்டில் இருந்தபடியே பங்கேற்றனர்.

மேலும் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு,  பதக்கமும் சான்றிதழ்களும் பள்ளியில் வழங்கப்பட்டன. மேலும் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு இணையதளம் வாயிலாகவே பாராட்டுச் சான்றிதழ் அனுப்பி வைக்கப்பட்டன.

இந்த இணையதள விளையாட்டுப் போட்டியில், 600க்கும் மேற்பட்ட மாணவர்களும், 50க்கும் மேற்பட்ட ஆசிரியர்களும் பங்கேற்று போட்டியை நடத்தினார்கள். நிகழ்ச்சியில் பள்ளி தாளாளர் ரவிச்சந்திரன், மேலாளர் அங்கையற்கண்ணி, கல்லூரி முதல்வர் பவித் உள்ளிட்ட ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

Tags:    

Similar News