தண்ணீர் லாரி மோதி ஒருவர் பலி; பெரம்பலூரில் கிராம மக்கள் சாலை மறியல்

தண்ணீர் லாரி மோதி ஒருவர் பலியானதால், அரியலூர்- பெரம்பலூர் சாலையில் கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2021-07-29 08:17 GMT

பெரம்பலூர் - அரியலூர் தேசிய நெடுஞ்சாலையில் கிராம மக்கள் சாலை மறியல் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு.

பெரம்பலூர் அருகே உள்ள கே.எறையூர் கிராமத்தை சேர்ந்தவர்  ராமச்சந்திரன்(35 ). இவர் தனது இரு சக்கர வாகனத்திற்கு பெட்ரோல் நிரப்புவதற்காக கே.எறையூர் பிரிவு சாலைக்கு வரும் பொழுது முன்னே சென்ற தண்ணி லாரியை முந்தினார. அப்போது எதிர்பாராதவிதமாக லாரியின் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பலியானார்.

இதைத்தொடர்ந்து, கே.எறையூர் சேர்ந்த கிராம பொதுமக்கள், கிராமத்தில் அதிகமான கிரஷர் மற்றும் குவாரிகள் உள்ளதால் அதிகமான லாரிகள் வருகின்றன. இந்த லாரிகள் அதிவேகமாக வருவதன் காரணமாக இந்த விபத்து நடந்துள்ளது. மேகம் கிராம சாலையை அகலப்படுத்தி வேகத்தடை தேவையான இடத்தில் அமைக்க வேண்டும் என தெரிவித்து கே.எறையூர் பிரிவு சாலையான பெரம்பலூர் - அரியலூர் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதனால், அப்பகுதியில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் பேச்சுவார்த்தையடுத்து பொதுமக்கள் சாலை மரியலை கைவிட்டனர்.

Tags:    

Similar News