நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்:அனைத்துக் கட்சி பிரமுகர்களுடன் ஆட்சியர் ஆலோசனை

அனைத்துக் கட்சி பிரமுகர்களுடனான ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சியர் ப.ஸ்ரீவெங்கட பிரியா தலைமையில் நடைபெற்றது

Update: 2022-01-29 13:45 GMT

பெரப்லூரில் மாவட்ட ஆட்சியர்  ப.ஸ்ரீவெங்கட பிரியா தலைமையில் நடைபெற்ற அனைத்துக்கட்சியினருடனான ஆலோசனைக்கூட்டம்

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், பெரம்பலூர் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் கொரோனா வழிகாட்டுதலின்படி நடத்துவது தொடர்பான அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சி பிரமுகர்களுடனான ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சியர் ப.ஸ்ரீவெங்கட பிரியா தலைமையில் நடைபெற்றது.

பெரம்பலூர் நகராட்சி மற்றும் நான்கு பேரூராட்சி பகுதியில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தல் மிகவும் அமைதியான முறையிலும் கொரோனா பரவல் ஏற்படாத வகையில் அரசு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றியும் நடத்தப்பட வேண்டும். அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் தங்களுக்கு தேவையான அனுமதிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் செயல்படும் பல்வேறு துறை அலுவலர்கள் ஒருங்கிணைந்து உள்ள ஒற்றைச் சாளர முறையில் அனுமதி பெற்றுக்கொள்ளலாம்.

தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடும்போது கொரோனா பரவாமல் தடுக்கும் வகையில் அரசு வழிகாட்டு நெறிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். ஊரக உள்ளாட்சி தேர்தல்களில் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து உங்கள் அனைவருக்கும் விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த விதிமுறைகளை அனைத்தையும் தவறாமல் பின்பற்ற வேண்டும். உள்ளாட்சி தேர்தல் அமைதியாகவும் சிறப்பாக நடைபெற அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் வேட்பாளர்களும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ச.மணி, நகராட்சி ஆணையர் திரு.குமரிமன்னன், பேரூராட்சி செயல் அலுவலர்கள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்

Tags:    

Similar News