மதுரை முதல் டெல்லி வரை இரு சக்கர வாகன யாத்திரை: பெரம்பலூரில் வரவேற்பு

சுதந்திர ஒற்றுமையையை வலியுறுத்தி மதுரை முதல் டெல்லி வரை செல்லும் இருசக்கர வாகன யாத்திரையை பெரம்பலூரில் வரவேற்ற பாரதிய ஜனதா கட்சியினர்.

Update: 2021-08-02 14:45 GMT

இந்திய திருநாட்டின் 75-வது சுதந்திர தினவிழா வரும் ஆகஸ்ட் 15ம் தேதி கொண்டாப்படுகிறது. இந்நிலையில் மதுரையை சேர்ந்த வழக்கறிஞர் விஜயலஷ்மி மந்தனா சுதந்திரதினத்தையொட்டி சுதந்திர ஒற்றுமையை வலியுறுத்தி இருசக்கர வாகனத்தில் மதுரை முதல் டெல்லி வரை பயணம் செய்கிறார். ஆகஸ்ட் 01 ம் தேதி மதுரையில் தொடங்கிய இந்த இருசக்கர வாகன யாத்திரைக்கு இன்று பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில பொதுக்குழு உறுப்பினர் முத்தமிழ்ச்செல்வன் தலைமையில் பாரதிய ஜனதா கட்சியினர் வரவேற்று வழியனுப்பி வைத்தனர். இந்நிகழ்வில் பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News