பெரம்பலூர்: மரணமடைந்த ராணுவவீரர் உடலை 21 குண்டுகள் முழங்க நல்லடக்கம் செய்தனர்

மேற்குவங்க மாநிலத்தில் பணியின் போது மாரடைப்பால் உயிரிழந்ததையடுத்து அவரது உடலுக்கு அமைச்சர், மாவட்ட ஆட்சியர் , சட்டமன்ற உறுப்பினர் மலர்துவி அஞ்சலி

Update: 2021-07-13 19:09 GMT

பெரம்பலூரைச் சேர்ந்த ராணுவவீரர் சங்கர் மேற்குவங்க மாநிலத்தில் பணியின் போது மாரடைப்பால் உயிரிழந்ததையடுத்து அவரது உடல் 21 குண்டுகள் முழங்க நல்லடக்கம் செய்யப்பட்டது.

பெரம்பலூர் அருகே உள்ள காரை கிராமத்தை சேர்ந்த சங்கர்,23 வருடங்களாக ராணுவத்தில் பணிபுரிந்து வந்தார்.கடந்த 50 நாட்களுக்கு முன்பு விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்துசென்ற சங்கர் மேற்குவங்கத்தில் பணிபுரிந்து வந்தார்.இந்த நிலையில் அவர் பணியின் போது மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த சங்கரின் உடல் ராணுவ நடைமுறைகள் முடிந்து நேற்றிரவு பெரம்பலூர் வந்தது.அதைத்தொடர்ந்து காலையில் ராணுவ வீரர் சங்கரின் உடல் காரை கிராமத்தில் பொதுமக்களின் அஞ்சலிக்கு வைக்கப்பட்டது.அவரது உடலுக்கு அமைச்சர் எஸ்.எஸ் சிவசங்கர்,பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் வெங்கடப்பரியா,சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன் உள்ளிட்டோர் மலர் வளையம் வைத்து மரியாதை செய்து அஞ்சலி செலுத்தி குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தனர்.

அதைத்தொடர்ந்து அரசு அதிகாரிகளும் பொதுமக்களும் அஞ்சலி செலுத்தினர்.பின்னர் ராணுவவாகனத்தில் சங்கரின் உடல் எடுத்துச்செல்லப்பட்டு இறுதிசடங்கு நடத்தப்பட்டது.அதனைத்தொடர்ந்து 21 குண்டுகள் முழங்க ராணுவ வீரர் சங்கரின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.ராணுவ வீரர் சங்கருக்கு ஜெகதீஸ்வரி(37) என்ற மனைவியும் விஷால்(11)ரித்தியன்(7)என்ற இருமகன்களும் உள்ளனர்.ராணுவ வீரர் சங்கரின் உயிரிழப்பு காரை கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News