பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் கல்வி குழுமத்தில் உலக மகளிர் தின விழா

பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் கல்வி குழுமத்தில் உலக மகளிர் தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

Update: 2022-03-08 10:52 GMT

பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் கல்வி குழுமத்தில் உலக மகளிர் தினவிழா நடந்தது.

தனலட்சுமி சீனிவாசன் கல்வி குழுமத்தில் உலக மகளிர் தினவிழா கொண்டாடப்பட்டது. கல்வி நிறுவனங்களின் நிறுவனங்களின் தலைவரும், வேந்தருமான அ.சீனிவாசன் தலைமையேற்று மகளிர் தின விழாவினைத் தொடங்கி வைத்தார் .

இவ்விழாவில் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் ப.ஸ்ரீவெங்கடபிரியா சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு சிறப்புரையில் தனலட்சுமி சீனிவாசன் கல்வி குழுமம் மகளிர் கல்வியை மேம்படுத்தும் நிறுவனமாக செயல்படுகிறது என்றும் , தமிழக அரசு பெண்கல்விக்காக பல திட்டங்களையும் ஊக்கத்தொகையையும் அளித்து வருகிறது . மேலும் சமுதாயத்தில் நம்மை உயர்த்துவது கல்வி மட்டுமே , முன்னோடிகள் பலரின் உழைப்பாலே இன்று நமக்கு சமத்துவம் கிடைத்துள்ளது என்றார்.

தனலட்சுமி சீனிவாசன் கல்வி நிறுவனங்களின் துணைத்தலைவர் அனந்தலட்சுமி கதிரவன் கௌரவ விருந்தினராகக் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார் . தனலட்சுமி சீனிவாசன் கல்வி குழுமத்தின் செயலர் பி.நீல்ராஜ் கலந்து கொண்டார் . ஆன்மீக இலக்கிய மற்றும் சுய முன்னேற்றப் பேச்சாளர் பைந்தமிழ்ச் செல்வி புதுகை ச.பாரதி வாழ்த்துரை வழங்கி பேசுகையில் பெண்களை போற்றி அவர்களுக்கு முன்னுரிமை கொடுப்பவர்களே மகளிர் தினத்தை கொண்டாடுவர் அவ்வகையில் இக்கல்விகுழுமம் பெண்களின் முன்னேற்றத்திற்கு உறுதுணையாக அமைந்துள்ளது என்றார்.

மேலும் இந்தியாவில் பெண்கல்வி மறுக்கப்பட்ட காலத்திலும் கல்வி கற்று இந்தியாவின் முதல் பெண் மருத்துவராக திகழ்ந்தவர் டாக்டர்.முத்துலெட்சுமி ரெட்டி அவர்களைப் போன்று வாழ்வில் வெற்றிபெற வேண்டும் என்று அறிவுரை வழங்கினார் . இவ்விழாவில் கல்வி குழுமங்களின் உறுப்பினர்கள் , முதல்வர்கள் , பேராசிரியர்கள் மற்றும் மாணவிகள் கலந்து கொண்டனர் . 

Tags:    

Similar News