பெரம்பலூர்: ஆலயங்களில் சுவாமி சிலைகள் மீண்டும் உடைப்பால் பரபரப்பு

பெரம்பலூர் மாவட்டத்தில் மீண்டும் இந்து கோயில்களில் சுவாமி சிலைகள் உடைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Update: 2021-10-27 16:44 GMT
பெரம்பலூர் மாவட்டத்தில் சுவாமி சிலைகள் மீண்டும் உடைக்கப்பட்டன.

பெரம்பலூர் மாவட்டம் சிறுவாச்சூர் கிராமத்தில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற  மதுரகாளியம்மன் திருக்கோவில். இத்திருக்கோவில் சக்தி ஸ்தலங்களில் முதன்மையாக உள்ளது

இத்திருக்கோவில் திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மட்டுமே திறந்து இருக்கும்.இத்திருக்கோவிலுக்கு அருகில் உள்ள பெரியசாமி மலையில் பெரியசாமி, செங்கமலயார், உள்ளிட்ட திருக்கோவில் உள்ளது.இந்நிலையில் கடந்த 6ம் தேதி பெரியசாமி மலையில் 5 க்கும் மேற்பட்ட சுடுமண் சிற்பங்கள் உடைக்கப்பட்டது.

அதனையடுத்து 8 ம் தேதி சிறுவாச்சூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கருப்பசாமி கோவிலில் சிலைகள் உடைக்கப்பட்டது.

இதனிடையே பெரியசாமி மலையில் 20 அடி உயரமுள்ள பிரமாண்ட பெரியசாமி சுடுமண் சிலை, செங்கமல சுவாமி சிலை, குரப்புள்ளையான் சிலை, வாகனங்கள் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட சுடுமண் சிலைகள் உடைக்கப்பட்டது.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த டி.எஸ்.பி. சஞ்சீவிகுமார் தலைமையிலான காவல்துறையினர் தடவியல் நிபுணர்,மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிறுவாச்சூர் பெரியசாமி மலையில் அடுத்தடுத்து சிலைகள் உடைக்கப்பட்டுள்ள  சம்பவம் பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News