பெரம்பலூர் ஊராட்சி ஒன்றியத்தில் தண்ணீர் மேலாண்மை குறித்த கருத்துப்பட்டறை

திறன் மேம்பாட்டு பிரிவு, இந்தோ அறக்கட்டளை சார்பில் பெரம்பலூர் ஊராட்சி ஒன்றிய அலுலகத்தில் தண்ணீர் மேலாண்மை குறித்த கருத்துப்பட்டறை நடைபபெற்றது.

Update: 2021-09-15 04:15 GMT

பெரம்பலூர் ஊராட்சி ஒன்றி அலுலகத்தில் தண்ணீர் மேலாண்மை குறித்து நடைபெற்ற கருத்துப் பட்டறையில் கலந்து கொண்ட ஊழியர்கள்.

தமிழக திறன் மேம்பாட்டு பிரிவு மற்றும் இந்தோ அறக்கட்டளை இணைந்து பெரம்பலூர் ஊராட்சி ஒன்றிய அலுலகத்தில் தண்ணீர் மேலாண்மை குறித்த கருத்துப்பட்டறை நடைபபெற்றது. இதில் தண்ணீர் சிக்கனம், தண்ணீர் மேலாண்மை மற்றும் பாதுகாப்பு குறித்து இந்தோ அறக்கட்டளை இயக்குநர் முகமது உசேன் பேசினார். நீரின் அவசியம் குறித்தும், நீர்ப்பரிசோதனை குறித்தும் வேதியிலாளர் கார்த்திக் ராஜா விவரித்தார். அங்கன்வாடி பணியாளர்கள், குடிநீர் தொட்டி இயக்குபவர்கள், துப்புரவு பணியாளர்கள் மற்றும் சுய உதவிக் குழு பெண்களுக்கு நீர் மேலாண்மை குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. இப்பயிற்சி பெற்றவர்கள் கிராமப்புற மக்களுக்கு நீர் மேலாண்மை, பாதுகாப்பு, குடிநீர் பரிசோதனை செய்யும் முறை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவார்கள். இந்நிகழ்ச்சியில் 20 ஊராட்சி மன்றங்களுக்கு குடிநீர் பரிசோதனைப்பெட்டி இலவசமாக வழங்கப்பட்டது.

Tags:    

Similar News