உயிரிழந்த தீயணைப்பு வீரரின் குடும்பத்தினருக்கு 30 லட்சம்

பெரம்பலுர் மாவட்டத்தில், மீட்புப் பணியின் போது உயிரிழந்த தீயணைப்பு வீரரின் குடும்பத்தினருக்கு 30 லட்சம் வழங்கிய பாரத ஸ்டேட் வங்கி.

Update: 2021-07-26 15:15 GMT
பணியின்போது உயிரிழந்த தீயணைப்பு வீரர் குடும்பத்திற்கு ரூ.30  லட்சம்  வழங்கிய பாரத ஸ்டேட் வங்கி  

பெரம்பலூர் தீயணைப்பு நிலையத்தில் பணிபுரிந்த தீயணைப்பு வீரர் ராஜ்குமார். இவர் கடந்த 2020 ம் ஆண்டு ஜூலை 13-ம் தேதி செல்லியம்பாளையம் கிராமத்தில் கிணற்றில் விஷவாயு தாக்கிய நபர்களை மீட்கும் பணியில் ஈடுபட்ட போது தீயணைப்பு வீரர் ராஜ்குமார் விஷவாயு தாக்கி உயிரிழந்தார். 

இதற்காக பாரத ஸ்டேட் வங்கியின் சார்பில் சேலரி பேக்கேஜ் அக்கௌன்ட் அடிப்படையில் உயிர்நீத்த தீயணைப்பு வீரர் ராஜ்குமாரின் குடும்பத்தினருக்கு ரூபாய் 30 லட்சம் மதிப்பிலான காசோலையை வழங்கும் நிகழ்ச்சி ஜூலை இன்று நடைபெற்றது. பெரம்பலூர் தீயணைப்பு கோட்ட அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீ வெங்கட பிரியா, தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை திருச்சி மத்திய மண்டல இணை இயக்குனர் சரவணன், பாரத மாநில வங்கி மண்டல மேலாளர் ஹேமா, பாரத வங்கியின் முதன்மை மேலாளர் அருள்ராஜ், மாவட்ட தீயணைப்பு அலுவலர் அம்பிகா, தீயணைப்பு நிலைய அலுவலர் உதயகுமார் உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டு பணியின் போது உயிர் நீத்த தீயணைப்பு வீரர் ராஜ்குமாரின் மனைவி உமா மற்றும் அவரது குழந்தைகள் இருவரிடமும் 30 லட்சத்திற்கான காசோலை வழங்கினார்கள்.

இந்நிகழ்ச்சியின் போது பான்டிசேரி, பாரத வங்கி மண்டல மேலாளர் ஹேமா தெரிவிக்கும்போது அனைத்து நபர்கள் மற்றும் அரசு அலுவலர்களும் வருடத்திற்கு ஆயிரம் ரூபாய் என்ற அடிப்படையில் தனி நபர் காப்பீடு செய்து கொள்ள வேண்டும், மேலும் அரசு ஊழியராக பணி புரியும் அனைவரும் சேலரி பேக்கேஜ் அக்கவுண்ட் இணைப்பில் சேர்ந்து பயனடைய வேண்டும் என கேட்டுக்கொண்டார்.இந்நிகழ்ச்சியில் தீயணைப்பு வீரர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News