அன்னமங்கலத்தில் தொடர் மின்வெட்டு, பொதுமக்கள் அவதி

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை ஒன்றியத்தில் உள்ள அன்னமங்கலம் கிராமத்தில் ஏற்பட்டுள்ள தொடர் மின்வெட்டால் கிராம மக்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர்.

Update: 2021-04-22 00:45 GMT

அன்னமங்கலம் கிராமத்தில் வழக்கத்திற்கு மாறாக அடிக்கடி மின்வெட்டு நிகழ்வது சர்வ சாதாரண நிகழ்வாக மாறியுள்ளது.கடந்த மாதம் தேர்தல் பரப்புரையில் முதல்வர் பழனிசாமி ஏப்ரல் மாதம் முதல் தமிழகத்தில் தொடர்ந்து மும்முனை மின்சாரம் வழங்கப்படும்.

இனி தமிழகத்தில் மின்வெட்டு என்பற்கு வாய்ப்பே இல்லை என தெரிவித்து வந்த நிலையில், இக்கிராமத்தில் மின்வெட்டு என்பது சாதாரண நிகழ்வாக உள்ளதாக கிராம மக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர். கடந்த இரண்டு தினங்களுக்கு மேலாக பகலில் மட்டும் நடந்து வந்த மின்வெட்டு. தற்போது நள்ளிரவில் தொடர்வதால் தூக்கத்தை தொலைத்தனர்.

இப்பகுதியினர் இரவிலும் இப்படி மின்வெட்டு தொடர்வதால் கோடை அனலின் தாக்கம் இரவில் வாட்டி வதக்கி வரும் நிலையில் மின்சாரம் இன்றி இப்பகுதி முதியவர்களும் குழந்தைகளும் பெரும் இன்னல்களுக்கு ஆளாகியுள்ளார்கள்.

மேலும் இக்கிராமத்தில் விவசாயிகளின் எண்ணிக்கை அதிகம் வழக்கமாக கோடையில் வெப்பம் பழிவாங்கும் நிகழ்வை காட்டிலும் மின்சாரம் இப்படி நேரகாலம் தெரியாமல் தடைபட்டு வருவதால் வயல்களுக்கு தண்ணீர் பாய்ச முடியாமல் பழிவாங்க படுவதாகவும் விவசாயிகள் தெவித்தனர்.

இந்த பகுதியில் ஏற்கனவே திருடர் பயத்தில் உறைந்துள்ள கிராம மக்கள், இது போன்று நள்ளிரவில் ஏற்படும் தொடர் மின்வெட்டுக்களால் மிகுந்த அச்சத்திற்கும் ஆளாகியுள்ளனர்.

மின்வெட்டுக்கான காரணம் முறையாக தெரிவிக்கப்படாமல் அதிகாரிகள் இருந்து வருகின்றனர். நள்ளிரவில் இக்கிராம மக்கள் படும் இன்னல்களை எண்ணிப்பார்த்து, மின்வெட்டு நிகழா வண்ணம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்பதே இக்கிராம மக்களின் கோரிக்கையாக இருந்து வருகிறது.

Tags:    

Similar News