பெரம்பலூரில் தொடர் ஆடுகள் திருட்டு - ஆடுகளை அழைத்து வந்து போலீஸ் எஸ்.பியிடம் மனு

பெரம்பலூரில் ஆடு திருடர்களை கண்டுபிடிக்க கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் ஆடுகளை அழைத்து வந்து கிராம மக்கள் மனு அளித்தனர்..

Update: 2021-04-23 05:30 GMT

.சமீப காலமாகவே பெரம்பலூரில் உள்ள கொளக்காநத்தம், குடிக்காடு, கொட்டரை, தெற்குமாதவி என 8ற்கும் மேற்பட்ட கிராமங்களில் இதுவரை 40க்கும் அதிகமான ஆடுகள் திருட்டு போகியுள்ளது.

இருசக்கர வாகனத்தில் வரும் மர்ம நபர்கள் திருடிச் செல்கின்றனர். இந்த குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட கயவர்களை கடந்த ஏப்.18 அன்று ஆடு திருட முயற்சி செய்த போது மக்கள் சிலர் விரட்டி பிடிக்கச் சென்றனர்.

அப்போது ஆடு திருடர்கள் ஆடுகளை கீழே இறக்கிவிட்டு சென்றனர். அப்போது கிராம மக்கள் செல்போனில் படம் பிடித்தனர். இது குறித்து உரிய ஆதாரங்களுடன் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும் போலீசார் தொடர்ந்து அலட்சியம் செய்து வருகின்றனர்.

ஆடு திருடர்களை மருவத்தூர் போலீசார் எந்த வித நடவடிக்கையும் எடுக்க வில்லை. இதனைத் தொடர்ந்து தொடர்ந்து பாதிக்கப்படும் ஆடு வளர்ப்போர் இன்று ஆடுகளுடன் பெரம்பலூர் சென்றனர். அங்கு மாவட்ட காவல் கண்பாளரிடம் மனு அளித்து, எங்கள் வாழ்வாதாரத்தை காப்பாற்றுங்கள் என கோரிக்கை வைத்தனர்.

Tags:    

Similar News