அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா, பான்மசாலா போன்ற பொருட்கள் பறிமுதல்.

அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா, பான்மசாலா போன்ற பொருட்களை விற்பனை செய்த நபரை கைது செய்த பெரம்பலூர் மாவட்ட காவல்துறையினர்.

Update: 2021-08-03 18:32 GMT

பெரம்பலூர் அருகே உள்ள செட்டிகுளம் கிராமத்தில் அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா, பான்மசாலா போன்ற பொருட்களை விற்பனை செய்த நபரை கைது செய்த பெரம்பலூர் மாவட்ட காவல்துறையினர்  நடவடிக்கை

பெரம்பலூர் மாவட்டம் அருகே உள்ள  செட்டிகுளம் கிராம பகுதியில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதாக கிடைத்த இரகசிய தகவலின்படி பாடாலூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர்  சிக்கந்தர் பாஷா மற்றும் உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் இளங்கோ மற்றும் ரவி ஆகியோர்களின் தலைமையிலானகுழு செட்டிகுளம் கிராமத்திற்கு விரைந்து சென்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.  

அப்போது மனித உயிருக்கு கேடு விளைவிக்கக்கூடிய புகையிலை மற்றும் குட்கா பொருட்களை விற்பனை செய்த முருகானந்தம் தெற்கு தெரு, செட்டிகுளம், பெரம்பலூர் என்பவரை அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்பனை செய்த காரணத்திற்காக கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்து வழக்குப்பதிவு செய்து அவர் விற்பனைக்காக வைத்திருந்த சுமார் 30000 ரூபாய் மதிப்புள்ள 25 கிலோ குட்கா, பான் மசாலா போன்ற போதை பொருட்களை கைப்பற்றினர்.

பின்னர் மேற்படி நபரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ச. மணி உத்தரவுப்படி காவல் உதவி ஆய்வாளர் நீதி மன்ற காவலுக்கு அனுப்பி வைத்தார். அரசு தடை  செய்யப்பட்ட போதைப் பொருட்களை விற்பனை செய்வதை மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News