பெரம்பலூர் கடைவீதியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்

பெரம்பலூர் நகராட்சிக்கு உட்பட்டபகுதிகளில் தடையை மீறி செயல்பட்ட கடைகளுக்கு மாநகரட்சி ஆணையர் குமரி மன்னன் சீல் வைத்தார்.

Update: 2021-08-13 07:15 GMT

144 தடை உத்தரவு மீறி கடை திறக்கப்பட்டு வியாபாரம் செய்த ஒரு மளிகை கடைக்கு  சீல் வைத்த நகராட்சி ஆணையர். 

பெரம்பலூர் நகராட்சிக்கு உட்பட்ட கடை வீதி, தபால் நிலைய பகுதி, பழைய பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் நகராட்சி ஆணையர் குமரி மன்னன் தலைமையில் நகராட்சி அலுவலர்கள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது கடைகளுக்கு கொண்டு வரப்படும் பார்சல் மூட்டைகளை ஆய்வு செய்ததில் பிளாஸ்டிக் கப் உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் இருப்பதை நகராட்சி அலுவலர்கள் பறிமுதல் செய்தனர்.

மேலும் 144 தடை உத்தரவை மீறி கடை திறக்கப்பட்டு வியாபாரம் செய்த மளிகை கடைக்கு நகராட்சி அலுவலர்கள் சீல் வைத்தனர். மேலும், மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவை மீறுபவர்கள் மீது கடும்  நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனர். ஆய்வின் போது துப்பரவு ஆய்வாளர்கள் பன்னீர்செல்வம், மோகன், துப்பரவு மேற்பார்வையாளர் ராஜ்குமார் உட்பட நகராட்சி பணியாளர்கள் உடன் இருந்தனர்.




Tags:    

Similar News