பெட்ரோல், டீசல் விலை உயர்வு: ஆட்டோ தொழிலாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய மோட்டார் வாகன சட்டத்தை அமல்படுத்த கூடாது என இதில் வலியுறுத்தப்பட்டது

Update: 2021-08-17 12:02 GMT

பெட்ரோல் டீசல் விலையுயர்வைக்கண்டித்து பெரம்பலூரில் ஆர்ப்பாட்டம் நடத்திய ஆட்டோ தொழிலாளர்கள்

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆட்டோ ஓட்டுநர் தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பெரம்பலூர் சிஐடியு ஆட்டோ ஓட்டுநர் சங்கத் தலைவர் சண்முகம் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், மத்திய அரசு உயர்த்தி வரும், பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வை உடனடியாக குறைக்க வேண்டும்,பெட்ரோல் டீசல் கேஸ் விலை ஜிஎஸ்டி கொண்டு வரவேண்டும்.

ஆட்டோ தொழிலாளர்கள் நல வாரியத்தில் ஆன்லைன் பதிவை ரத்து செய்திட வேண்டும், மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய மோட்டார் வாகன சட்டத்தை அமல்படுத்த கூடாது. ஆட்டோ தொழிலாளர்களுக்கு தனி நல வாரியம் அமைத்திட வேண்டும். கொரோனோ ஊரடங்கு காலத்தில் வேலை இழந்த ஆட்டோ தொழிலாளர்களுக்கு மாதம் ரூபாய் 7500 நிவாரணம் வழங்க வேண்டும்,

கொரோனோ காலத்தில் ஆட்டோவிற்கு எப்.சி, லைசென்ஸ் புதுப்பித்தல் சாலைவரி செலுத்த 6 மாத கால அவகாசம் கொடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன முழக்கமிட்டனர். ஆர்ப்பாட்டத்தில் சிஐடியு ஆட்டோ தொழிலாளர்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News