அமைப்பு சாரா தொழிலாளர்களின் விவரங்கள் பதிவு : ஆலோசனைக் கூட்டம்

16 வயது முதல் 58 வயது வரை உள்ள அனைவரும் பதிவு செய்யலாம். இப்பதிவுகள் இ-சேவை மையங்களில் இலவசமாக பதிவு செய்யபடும்

Update: 2021-09-20 17:45 GMT

பெரம்பலூரில் நடைபெற்ற ஆலோசனைக்கூட்டத்தில் பேசிய மாவட்ட ஆட்சியர் ஸ்ரீவெங்கடப்பிரியா

பெரம்பலூரில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீவெங்கடப்பிரியா பேசியதாவது: அமைப்பு சாரா தொழிலாளர்களின் பதிவிற்காக இந்திய அரசால் eSHRAM என்ற தரவு தளம் தொடங்கப்பட்டுள்ளது. இத்தளத்தில் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட பணியாளர்கள், சுய உதவி குழு உறுப்பினர்கள், தெரு வியாபாரிகள், ஆட்டோ ஓட்டுனர்கள், கட்டுமான தொழிலாளர்கள், விவசாய தொழிலாளர்கள், மீனவர்கள், செங்கல் சூளை தொழிலாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தொழில்கள், பணி செய்பவர்கள் பதிவு மேற்கொள்ள தரவு தளத்தை பயன்படுத்த வேண்டும்.

16 வயது முதல் 58 வயது வரை உள்ள அனைவரும் பதிவு செய்யலாம். இப்பதிவுகள் இ-சேவை மையங்களில் இலவசமாக பதிவு செய்யபடும். இலவசமாக அடையாள அட்டை வழங்கப்படும். தற்போது அமைக்கப்பட்டுள்ள குழுவினர் தங்களது துறையின் கீழ் ஏற்கனவே உள்ள புள்ளி விவரங்களை வைத்து அவர்களை இத்தளத்தில் இணைக்க வேண்டும். இக்கூட்டத்தின் முக்கிய நோக்கம் அமைப்புசாரா தொழிலாளர்கள் அனைவரையும் விடுபடாமல் சேர்க்க வேண்டும்.

பி.எப் மற்றும் இ.எஸ்.ஐ உள்ளவர்கள் இதில் இணைக்க இயலாது. தாங்கள் சேர்த்துள்ள தொழிலாளர்களின் விவரங்களை தொழிலாளர் உதவி ஆணையர் அவர்களுக்கு உரிய படிவத்தில் வழங்க வேண்டும். இப்பணி மிக முக்கியமான பணியாகும். இப்பணிகளை அனைத்து அலுவலர்களும் ஒருங்கினைந்து அனைவரையும் விடுபடாமல் சேர்க வேண்டும். இப்பணிகளை இம்மாத இறுதிக்குள் விரைந்து முடிக்க வேண்டும் என ஆட்சியர் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர்கள் பாஸ்கரன் (அமலாக்கம்) முகமது யூசுப் (சமூக பாதுகாப்பு திட்டம்), மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பொம்மி, துணை ஆட்சியர்(சமூக பாதுகாப்பு திட்டம்) எஸ்.சரவணன், சுகாதாரப்பணிகள் துணை இயக்குநர் செந்தில்குமார், மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் செந்தில்குமார், நகராட்சி ஆணையாளர் குமரிமன்னன் உள்ளிட்ட அனைத்துத்துறை அலுவலர்கள் மற்றும் தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News