பெரம்பலூரில் நெகிழிப்பொருட்களுக்கு எதிராக விழிப்புணர்வு பேரணி

பெரம்பலூரில் நெகிழிப்பொருட்களுக்கு எதிராக விழிப்புணர்வு பேரணி நகராட்சி சார்பில் நடத்தப்பட்டது.

Update: 2021-12-20 13:54 GMT

பெரம்பலூர் நகராட்சி சார்பில் நெகிழி பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது.

பெரம்பலூர் நகராட்சி சார்பில் ஒருமுறை மட்டும் பயன்படுத்தக்கூடிய நெகிழிப்பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பெரம்பலூர் நகராட்சி அலுவலகத்தில் தொடங்கிய இப் பேரணியை நகராட்சி ஆணையர் குமரிமன்னன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

நகராட்சி அலுவலகத்தில் தொடங்கிய பேரணி பாலக்கரை வெங்கடேசபுரம் கடைவீதி , பழைய பேருந்து நிலையம் வழியாக பழைய நகராட்சி அலுவலகத்தில் முடிவுற்றது.

இப்பேரணியில் 300க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் நெகிழிக்கு எதிரான விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்திச் சென்றனர். மேலும் ஒரு முறை மட்டும் பயன்படுத்தும் நெகிழி தடை செய்யப்பட்டு உள்ளது. பொதுமக்கள்  நெகிழியை பயன்படுத்த கூடாது எனவும் தெரிவித்தார்கள். இந்த பேரணியில் பன்னீர் செல்வம், மோகன் உள்பட நகராட்சி அலுவலர்கள்  பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News