கொரோனா காலத்தில் பணிபுரிந்த தற்காலிக செவிலியர்கள் பணி நிரந்தரம் கோரி மனு

கொரோனா காலத்தில் அரசு மருத்துவமனையில் பணிபுரிந்த தற்காலிக செவிலியர்கள் பணி நிரந்தரம் கேட்டு ஆட்சியரிடம் மனு.

Update: 2021-07-28 17:30 GMT

கொரோனா காலத்தில் அரசு மருத்துவமனையில் பணிபுரிந்த தற்காலிக செவிலியர்கள் பணி நிரந்தரம்  கேட்டு பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு.

பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில், கொரோனோ தொற்று காலத்தில் பணியமர்த்தப்பட்ட தற்காலிக செவிலியர்களுக்கு தற்பொழுது பணிவிலக்கு அளித்துள்ளனர். இதில் தற்காலிக பணி செய்த செவிலியர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று கோரிக்கை மனுவை அளித்தனர்.

அதில் கடந்த காலத்தில் தங்கள் குடும்பம் மற்றும் பிள்ளைகளைப் பிரிந்து, மருத்துவ சேவையை கருத்தில் கொண்டு உயிரை பணையம் வைத்து தற்காலிகப் பணி செய்து வந்த நாங்கள் தற்போது பணியில் இருந்து வெளியேற்றப்பட்டு உள்ளோம். தங்களுக்கு பணி புரிந்த மாதத்திற்கு இதுவரை ஊதியம் வழங்கப்படவில்லை, அதற்கான ஊதியம் வழங்கப்படும் என்றும் மேலும் நாங்கள் வெளியில் சென்று வேலை பார்க்க முடியாததால் அரசு மருத்துவமனைகளில் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுவினை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினார்கள். இந்நிகழ்வின் போது 20க்கும் மேற்பட்ட செவிலியர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News