பெரம்பலூர் அருகே ஊரடங்கால் வயல்களில் வீணாகும் காய்கறிகள் : விவசாயிகள் வேதனை

பெரம்பலூர் அருகே வெங்கனூரில் ஊரடங்கால் வயல்களிலேயே காய்கறிகள் வீணாகிவருகிறது என்று விவசாயிகள் வேதைன தெரிவித்துள்ளனர்.

Update: 2021-06-01 12:30 GMT

பெரம்பலூர் மாவட்டம்  வெங்கனூரில் ஊரடங்கால் விவசாயிகளின் வயல்களிலேயே காய்கறிகள் வீணாகிறது என விவசாயிகள் கவைலயைடந்துள்ளனர்.

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை அருகே வெங்கனூரில் உள்ள கவர்பணை பகுதியில் வசித்தி வரும் விவசாயி செல்வராஜ் தனது தோட்டத்தில் ஐந்தாயிரம் ரூபாய் செலவளித்து வெண்டை பயிர் செய்த நிலையில் தற்போது நன்கு விளைந்து அறுவடைக்கு தயாராகி இருந்த ஐம்பது கிலோ வெண்டைக்காய்களை விற்க முடியாமல் தவித்து வருவதாக வேதனை தெரிவிக்கின்றார்.

மேலும் அதே பகுதியைச் சேர்ந்த பிரசாந்த் என்பவர் அவரது வயலில் தக்காளி பயிர் செய்து நன்கு விளைந்து பழுத்து கிடக்கும் பழங்களை ஊரடங்கு காரணமாக யாரும் கொள்முல் செய்ய யாரும் வராததால் பழங்கள் வயலிலேயே வீணாவதாக வேதனை தெரிவிக்கின்றார்.

மேலும் மற்ற காய்கறிகளைப் போல் தக்காளி நாள் கணக்கில் தாங்காது என தெரிவித்த அவர் தற்போது ஊரடங்கில் சந்தைகளும் மார்கெட்களும் இயங்காததால் உடனடியாக வேளாண் மற்றும் தோட்டக்கலையில் அரசே நல்ல விலைக்கு கொள்முதல் செய்து காய்களை மக்களிடம் விற்பனைக்கு கொண்டு செல்ல வேண்டுமென வலியுறுத்தினார்.

தற்போது தமிழகத்தில் ஊரடங்கு காரணமாக பல பகுதிகளிலும் நடமாடும் வாகனங்கள் மூலம் காய்கறிகளை விற்பனை செய்து வரும் தமிழக அரசு விவசாயிகளின் காய்கறிகள் வயல்களில் வீணாகாமல் தடுத்து நல்ல விலைக்கு கொள்முதல் செய்து மக்களிடம் விற்பனைக்கு கொண்டு போய் சேர்க்க வேண்டுமென்ற  விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News