மாநில அளவில் நடந்த போட்டியில் பெரம்பலூர் சீனிவாசன் கல்லூரி மாணவிகள் சாதனை

மாநில அளவில் நடந்த போட்டியில் பெரம்பலூர் சீனிவாசன் கல்லூரி மாணவிகள் சாதனை படைத்தனர்.

Update: 2022-04-26 10:25 GMT

வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுடன் கல்லூரி தலைவர் சீனிவாசன், செயலாளர் நீல்ராஜ் உள்ளனர்.

பெரம்பலூர் சீனிவாசன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வணிகவியல் துறையைச் சார்ந்த மாணவ மாணவிகள் விருதுநகர் ஹிந்து நாடார் செந்திகுமாரா நாடார் கல்லூரியில் கல்லூரிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டிகளில் கலந்து கொண்டனர் . வணிகவியல் தொடர்பான சைகை நாடகம் , குறும்படம் , ரங்கோலி , வணிகம் தொடர்பான வினாடிவினா . மணப்பெண் அலங்காரம் , நெருப்பில்லா சமையல் , புகைப்படமெடுத்தல் , கழிவுகளிலிருந்து கலை போன்ற போட்டிகள் நடைபெற்றது .

இப்போட்டிகளில் நெருப்பில்லா சமையல் மற்றும் புகைப்படமெடுத்தல் ஆகிய போட்டிகளில் இரண்டாம் இடத்தையும் குறும்படத்தில் மூன்றாம் இடத்தையும் வென்று வெற்றி வாகை சூடினார்கள் . இப்போட்டிகளில் 50 - க்கும் மேற்பட்ட கல்லூரிகளிலிருந்து 1000 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர் . போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளை கல்லூரியின் தலைசர் சீனிவாசன் ரெட்டியார், செயலாளர் நீல்ராஜ், முதல்வர் முனைவர் நா . வெற்றிவேலன் அவர்களும் , துணை முதல்வர் பேராசிரியர் கோ . இரவி வாழ்த்திப் பாராட்டினார்கள் . வணிகவியல் , வணிகவியல் கணினி பயன்பாட்டியல் துறைத்தலைவர்கள் முனைவர் . ர . கார்த்திகா , முனைவர் . குமார் மற்றும் துறைப் பேராசிரியர்களும் உடனிருந்தனர் .

Tags:    

Similar News