பெரம்பலூர்: உரக்கடை பூட்டை உடைத்து ரூ.30ஆயிரம் திருட்டு

இந்த சம்பவத்தில் கல்லாவில் வைத்திருந்த பணம் 30,000 மற்றும் சிசிடிவி கேமரா ஸ்டோரேஜ் யூனிட் திருடு போயிருந்தது தெரிய வந்துள்ளது.

Update: 2022-01-24 17:45 GMT

கைது செய்யப்பட்ட தெய்வசிகாமணி.

பெரம்பலூர் அருகே உள்ள அம்மாபாளையம் கிராமத்தில் மெயின் ரோட்டில் வசித்து வருபவர் செல்லப்பெருமாள் மகன் நாகராஜன். இவர் அதே பகுதியில் சுப்புராம் மகன் விவேக் என்பவரது  இடத்தில் கடந்த 34 வருடங்களாக வெங்கடேஸ்வரா ஏஜென்சி என்ற பெயரில் பூச்சி மருந்து கடை வைத்து நடத்தி வருகிறார்.

நேற்று முன்தினம் இரவு கடையை பூட்டி விட்டு தனது வீட்டிற்கு சென்றுவிட்டார். மீண்டும் அடுத்த நாள் காலையில் கடையை  திறப்பதற்கு வந்து பார்த்த போது கடையின் கதவின் வலதுபுறம் உள்ள பலகை உடைக்கப்பட்டிருந்தது பார்த்து உள்ளே சென்று பார்த்தபோது கல்லாவில் வைத்திருந்த பணம் 30,000 மற்றும் சிசிடிவி கேமரா ஸ்டோரேஜ் யூனிட் திருடு போயிருந்தது தெரிய வந்துள்ளது.

இதனைத்தொடர்ந்து அருகே உள்ள சலூன் கடையில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை பார்வையிட்டபோது களரம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த அய்யாவு மகன் தெய்வசிகாமணி என்பவர் நள்ளிரவில் கடைக்குச் சென்று வெளியே வந்துள்ளது தெரியவந்தது. இதனை தொடர்ந்து பெரம்பலூர் போலீசார் நாகராஜன் கொடுத்த புகாரின் பேரில் களரம்பட்டி தெய்வசிகாமணியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதில் பொங்கல் சமயத்தில் இதே தெய்வசிகாமணி லாடபுத்தில் உள்ள கடையில் புகுந்து திருட்டு சம்பத்தில் ஈடுபட்தும், கடந்த 2006 ஆம் ஆண்டில் தெய்வசிகாமணி மீது பெரம்பலூர் போலீசில் திருட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது எனவும் தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து பெரம்பலூர் இன்ஸ்பெக்டர் முருகேசன் தெய்வசிகாமணி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தார்.

Tags:    

Similar News