மகிளா நீதிமன்ற தீர்பை உறுதி செய்தது உயர் நீதி மன்றம், வாலிபர் சிறையில் அடைப்பு

பெரம்பலூர் போக்சோ வழக்கின் தீர்ப்பை சென்னை உயர் நீதி மன்றம் உறுதி செய்தது. வாலிபர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

Update: 2021-09-01 17:45 GMT
பைல் படம்

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டத்திலுள்ள வயலப்பாடி கிராமத்தைச் சேர்ந்த மதியழகன் இவரது மகன் கருப்பையா வயது- 23, இவர் கடந்த 2018ஆம் ஆண்டு அதே ஊரைச் சேர்ந்த ஒரு சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த சம்பவத்தில்,

பெரம்பலூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் மூலம் கருப்பையாவை போக்சோ வழக்கில் கைது செய்தனர், இதனைத் தொடர்ந்து பெரம்பலூர் மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் அடிப்படையில் கடந்த 04.10.2019ஆம் தேதி நீதிபதி விஜயகாந்த், வழக்கை விசாரித்து குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை தண்டனை, 3 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.

இதனைத் தொடர்ந்து கருப்பையா தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டு வழக்கு நடைபெற்று வந்ததில், குற்றவாளி கருப்பையா விற்கு பெரம்பலூர் மாவட்ட மகிளா நீதிமன்றம் வழங்கிய தீர்பு செல்லுபடி ஆகும் என அதே தீர்பை சென்னை உயர் நீரி மன்றம் உறுதி செய்தது

அதனை தொடர்ந்து, செப்டம்பர் - 1 ம் தேதியான இன்று, பெரம்பலூர் அனைத்து மகளிர் காவல்நிலைய ஆய்வாளர் ஜெயசித்ரா தலைமையில், உதவி காவல் ஆய்வாளர் விஜயலட்சுமி, முதுநிலை காவலர் லட்சுமி ஆகியோர், குற்ற வழக்கில் தொடர்புடைய கருப்பையாவை கைது செய்து பெரம்பலூர் மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, திருச்சி மத்திய சிறைக்கு அழைத்து சென்றனர்.

Tags:    

Similar News