கொரோனா முன்களப் பணியாளர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கல்

பெரம்பலூர் மாவட்டம் செட்டிகுளம் அரசு பள்ளி சார்பில் கொரோனா முன்களப் பணியாளர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.

Update: 2021-06-30 14:25 GMT

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா செட்டிகுளம் அரசு பள்ளி சார்பில் கொரோனா முன்களப் பணியாளர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா செட்டிகுளம் கிராமத்தில் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் அனைத்து ஆசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் அனைவரும் செட்டிகுளம்,பொம்மனப்பாடி, நாட்டார்மங்கலம்,குரூர் கிராம ஊராட்சிகளில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைக்கான முன்களப் பணியாளராக பணிபுரியும் ஊராட்சி பணியாளர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கி உதவி செய்ய வேண்டுமென முடிவெடுத்து சூன் -30 இன்று பள்ளித் தலைமையாசிரியர் நாகமணி தலைமை வகித்தார்.

செட்டிகுளம் ஒன்றிய குழு உறுப்பினர் திருநாவுக்கரசு,ஊராட்சி மன்ற தலைவர் தங்கராசு முன்னிலை வகித்தனர்.முதன்மை கல்வி அலுவலர் மதிவாணன்,மாவட்ட கல்வி அலுவலர் குழந்தைராஜன் ஆகியோர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கொரோனா நிவாரண பொருட்கள் வழங்கி உதவி செய்யப்பட்டன. இதில், 60க்கும் மேற்பட்ட முன்களப் பணியாளர்களுக்கு தலா 5 கிலோ அரிசி உள்ளிட்ட 14 வகையான பொருட்கள் அடங்கிய நிவாரணப் பொருட்களை வழங்கி உதவி செய்யப்பட்டது.

இந்நிகழ்ச்சியில், பள்ளி உதவி தலைமையாசிரியர் மணி, ராதாகிருஷ்ணன் மற்றும் சக ஆசிரியர்கள், துணைத் தலைவர் காமாட்சி ராமராஜ், முன்னாள் பள்ளி மாணவர்கள் ராஜாசிதம்பரம், விஜய்அரவிந்த், கிராம பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News