பெரம்பலூர் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவர் சேர்க்கை

பெரம்பலூர் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவர் சேர்க்கை நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

Update: 2021-10-13 16:04 GMT

பெரம்பலூர் ஐ.டி.ஐ.யில் மாணவர்கள் பயிலும் காட்சி (கோப்பு படம்).

பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் ஸ்ரீவெங்கட பிரியா வெளியிட்டு உள்ள ஒரு  அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

2021-ம் ஆண்டில் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர்க்கை இணையவழியில் நடைபெற்றது. எனினும் பெரம்பலூர் அரசு தொழிற்பயிற்சி நிலையம்  மற்றும் ஆலத்தூர் அரசு தொழிற்பயிற்சி நிலையம்  ஆகிய இரண்டு தொழிற்பயிற்சி நிலையங்களிலும் குறிப்பிட்ட இடங்கள் காலியாக உள்ளன.

எனவே 08.10.2021 முதல் 30.10.2021 வரை இந்த இரண்டு அரசு தொழிற்பயிற்சி நிலையங்களிலும் நேரடிச் சேர்க்கைக்கு  விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. எனவே மாணவர்கள் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களை (பெரம்பலூர் மற்றும் ஆலத்தூர்) நேரடியாக அணுகி காலியாக உள்ள தொழிற்பிரிவுகளில் தாங்கள் சேர விரும்பும் தொழிற்பிரிவை தேர்ந்தெடுத்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மேலும் விபரங்களுக்கு முதல்வர், அரசு தொழிற்பயிற்சி நிலையம், பெரம்பலூர் 04328-296644 என்ற தொலைபேசி எண்ணிலும், 9499055882 என்ற அலைபேசி எண்ணிலும், முதல்வர் அரசு தொழிற்பயிற்சி நிலையம், ஆலத்தூரில் 9499055853 என்ற அலைபேசி எண்ணிலும் தொடர்புகொண்டு பயன்பெறலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News