பெரம்பலூரில் சுகாதார வளாகத்தை சீர் செய்து தர வேண்டும் : பொதுமக்கள் கோரிக்கை

பெரம்பலூரில் பழுதடைந்த சுகாதார வளாகத்தை சீர் செய்து தரவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2021-06-10 05:45 GMT

பெரம்பலூர் நகராட்சியில் உள்ள சுகாதார வளாகத்தை சீர் செய்து தரவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனை பின்புறம் அமைந்துள்ள இந்திரா நகர் குடியிருப்பு பகுதியில் உள்ள அங்காளம்மன் கோவில் தெருவில் 170 அதிகமான குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

இங்குள்ள பகுதி மக்களுக்காக கடந்த 2008 ஆம் ஆண்டில் அரசு சார்பில் பொதுகழிப்பிடம் அமைத்து தரப்பட்டது. தற்போது அந்த பொது கழிவறையில் பராமரிப்புகள் அற்று கட்டிடத்தில் உள்ள தண்ணீர் தொட்டிகள் வெடிப்புகளோடு காணப்படுகிறது.

இது குறித்து அப்பகுதி மக்களிடையே கேட்டபோது இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக அனைத்து அதிகாரிகளிடமும் இது தொடர்பாக புகார் தெரிவித்தும் யாரும் எட்டிக் கூட பார்க்கவில்லை என வருத்தம் தெரிவித்தனர்.

இந்த பொது கழிப்பிடம் பயன்பாட்டில் இருந்த போது இப்பகுதி மக்களுக்கு கழிவறைக்கு சென்றுவர பயனுள்ளதாக இருந்ததென்றும் தற்போது இரு வருடங்களாக கழிவறையை பயன்படுத்த முடியாமல் வீடுகளில் உள்ள பெண்களும் சிறுமியர்களும் அருகில் உள்ள முட்புதர்களுக்கு சென்று வரும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக வேதனை தெரிவிக்கின்றனர்.

மேலும் அப்பகுதிகளில் விசபூச்சிகள் அதிகம் தென்படுவதால் இரவு வேலைகளில் பொதுவெளிகளுக்கு செல்ல மிகுந்த அச்சம் ஏற்பட்டுள்ளதாகவும் முறையிட்டனர்.

நாடு முழுவதும் வீட்டுக்கு வீடு கழிவறை திட்டம் பொது வெளியில் மலம் கழிப்பதை தடுப்போம் என சுகாதாரத்துறை கிராமப்புறங்களில் சுவரக்கு சுவர் விளம்பரம் செய்துவந்தாலும் பெரம்பலூர் நகரில் அரசு தலைமை மருத்துவமனைக்கு பின்புறம் கழிவறைக்கு செல்ல முடியாமல் பாதிக்கப்பட்டுள்ள நூறுக்கும் மேற்பட்ட குடும்பங்களின் அவலத்தை போக்க பழுதடைந்துள்ள அரசு கழிவறையை சீரமைத்து தர வேண்டுமென்பதே அப்பகுதி மக்களின் தற்போதைய எதிர்பார்ப்பாக மாறியுள்ளது.

Tags:    

Similar News