முடி திருத்தும் தொழிலாளர்களுக்கு ரூ 10 ஆயிரம் நிவாரணம் வழங்க அரசுக்கு கோரிக்கை

தமிழ்நாடு முடி திருத்தும் தொழிலாளர்கள் கொரோனா நிவாரண நிதியாக ரூ 10 ஆயிரம் வழங்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2021-05-30 01:33 GMT

தமிழக முடி திருத்தும் தொழிலாளர்களுக்கு கொரோனா நிவாரணமாக ரூ 10 ஆயிரம் வழங்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

பெரம்பலூர் மாவட்ட தமிழ்நாடு முடிதிருத்தும் தொழிலாளர் நலசங்கம் சார்பில் வடக்குமாதவி சாலையில் உள்ள தனியார் வணிக மையத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பு கூட்டத்தில் பேசிய முடிதிருத்தும் தொழிலாளிகள் இந்த கொரோனா ஊரடங்கால் பல்வேறு பாதிப்புகளுக்கு ஆளாகி உள்ளதாகவும் அரசு அவ்வபோது அறிவிக்கும் தளர்வுகளால் தங்கள் முடிதிருத்தும் நிலையங்களுக்கு எந்தவித தளர்வுகள் வழங்கப்படாதது வேதனை அளிப்பதாக தெரிவித்தனர்.

இதுவரை பெரம்பலூரில் கொரோனா தொற்றால் 5 கும் அதிகமான முடிதிருத்தும் தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளதாகவும் அவர்களது குடும்பத்தினர் தற்போது வருமானம் இன்றி உணவிற்கே அல்லல்பட்டு வருவதாக வேதனை தெரிவித்தனர்.

இது போன்று பல்வேறு பிரச்சனைகளை கொரோனா ஊரடங்கில் சந்தித்து வரும் எங்களுக்கு தமிழக அரசு பத்தாயிரம் நிவாரணமும், மருத்துவ காப்பீடு வழங்கிட வழிவகுக்க வேண்டுமென கேட்டுக்கொண்டனர்.

 தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் எங்களது கோரிக்கையை ஏற்று நிவாரணம் வழங்க ஏற்பாடு செய்திட வேண்டுமென வலியுறுத்தினர்.

Tags:    

Similar News