பெரம்பலூரில் மருத்துவர்கள் தின விழா

பெரம்பலூரில் மருத்துவர்கள் தின விழாவில், பிற்படுத்தப்பட்ட நலத்துறை அமைச்சர் சிவசங்கர் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தார்.

Update: 2021-07-01 14:00 GMT

பெரம்பலூரில் மருத்துவர்கள் தின விழா கொண்டாட்டத்தில்,  பிற்படுத்தப்பட்ட நலத்துறை அமைச்சர் சிவசங்கர் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தார்.

தேசிய மருத்துவர்கள் தினம் ஆண்டு.தோறும் ஜூலை 1ம் தேதி கொண்டாடப்படுகிறது, இதனை முன்னிட்டு பெரம்பலூர் மாவட்ட சுகாதாரத்துறை சார்பில், மருத்துவர் தின விழா பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் எதிரே உள்ள நகர்ப்புற சுகாதார நிலையத்தில் இன்று கொண்டாடப்பட்டது, தமிழ்நாடு மருத்துவர் அலுவர் சங்க மாவட்ட செயலாளர் யோகேஸ்வரன் தலைமை வகித்தார்.

விழாவில், தமிழக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவசங்கர்,கலந்துகொண்டு பேசியபோது, சமூக நீதிக்கு எதிரான இந்த நீட் தேர்வு தமிழகத்தில் நுழையவிடாமல் நீட் தேர்வை ரத்து செய்ய அனைத்து விதமான நடவடிக்கைகளும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் எடுத்து வருகிறோம். மாநில கல்வி உரிமைகளை மத்திய அரசு பறித்து வருகிறது என்று கூறினார்.

இவ்விழாவில், பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் ராஜேந்திரன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மருத்துவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்தனர். மேலும், கொரோனோ காலக்கட்டத்தில் சிறப்பாக பணிபுரிந்த 10 மருத்துவர்களுக்கு நினைவு பரிசுகளை அமைச்சர் சிவசங்கர் வழங்கினார், இதனைத் தொடர்ந்து மருத்துவர்கள் அனைவரும் கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்தனர்.

விழாவில், பெரம்பலூர் மாவட்ட அரசுத்துறை மருத்துவர்கள கலைமணி, வலவன், சூரியகுமார், பிரேம்குமார், மகாலட்சுமி, மற்றும் சுகாதாரத் துறை வட்ட மேற்பார்வையாளர் ராஜ்மோகன் உள்ளிட்ட மருத்துவர்கள், சுகாதாரத் துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News