தெருவிளக்கு ஒளிராததால் 3 மணி நேரமாக மக்கள் திணறல்

Update: 2021-04-28 16:50 GMT

அன்னமங்கலத்தில் இரவு நேரங்களில் அறிவிக்கப்படாத மின்வெட்டால் கிராம மக்கள் தூக்கத்தை தொலைத்து திண்டாடி வருகின்றனர். இன்று மாலை 6 மணிக்கு மேலாக அன்னமங்கலம் ஊராட்சியில் உள்ள அனைத்து பகுதிகளிலும் தெருவிளக்குகள் எரிந்த நிலையில், வடக்கு தெரு மற்றும் மாரியம்மன் கோவில் தெருவில் தெருவிளக்குகள் ஒளிராததால் அப்பகுதியில் உள்ள 200 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் சாலையில் செல்ல முடியாமலும் முதியவர்களும் குழந்தைகளும் வீட்டிலேயே முடங்கி உள்ளனர்.

சமீபத்தில் மாரியம்மன் கோவில் முன்பாக அமைக்கப்பட்ட உயர் மின்கோபுரத்தால் திருடர் பயம் நீங்கியதாக தெரிவித்த கிராம மக்கள் தற்போது இந்த உயர் மின்கோபுர விளக்கு மற்றும் தெருவிளக்குகள் இப்படி ஒளிராமல் இருப்பது மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக வேதனை தெரிவிக்கின்றனர்.

மேலும் இது தொடர்பாக ஊராட்சியில் தகவல் தெரிவித்தும் தெருவிளக்கு ஒளிராமல் இருப்பதற்கு எந்த பதிலும் வழங்கப்படாமல் அலுவலர்கள் இருந்து வருவதாக குற்றம் சாட்டும் கிராம மக்கள் விரைந்து தெருவிளக்கை ஒளிரச்செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர்.

Tags:    

Similar News