மலேசியாவில் ஏப்ரல் 1ம் தேதி முதல் சகஜ நிலை திரும்பும் என தூதர் தகவல்

மலேசியாவில் ஏப்ரல் 1ம் தேதி முதல் சகஜ நிலை திரும்பும் என தூதர் தகவல் தெரிவித்தார்.

Update: 2022-03-21 17:32 GMT

 மலேசிய நாட்டின் தூதர் அப்துல் ஹமீது ஹிதாயத் பெரம்பலூரில் பேட்டி அளித்தார்.

இந்திய நாட்டிற்கான மலேசிய தூதரும் அந்நாட்டிற்கான ஹை கமிஷனருமான அப்துல் ஹமீது ஹிதாயத்பெரம்பலூர் மாவட்டம் பூலாம்பாடி யிலுள்ள தொழிலதிபர் டத்தோ பிரகதீஷ் குமார் என்பவர் இல்லத்திலிருந்து செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர் கோரோனோ தொற்றினால் மலேசிய நாட்டில் பணியாற்றிய சுமார் 2 மில்லியன் தொழிலாளர்கள் சொந்த நாட்டிற்கு திரும்பியதால் மலேசியாவில் தொழில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்றும் இதனால் தொழிலாளர்கள் மட்டுமின்றி நிறுவனங்களும் பாதிக்கப்பட்டு பொருளாதார நெருக்கடியும் ஏற்பட்டுள்ளது என்றார்.

மேலும்  மலேசிய நாட்டில் வருகின்ற ஏப்ரல் மாதம் 1.ம் தேதி முதல் ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளால் மீண்டும் சகஜ நிலை திரும்பும் என குறிப்பிட்ட அவர், தொழிலாளர்கள் மீண்டும் மலேசியாவிற்கு திரும்ப முடியும். நிறுவனங்கள் வழக்கம்போல செயல்படும்என்றும் தெரிவித்தார்.மலேசியா திரும்பும் இந்தியதொழிலாளர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்தியிருப்பது அவசியம் என்றும் அவர் தெரிவித்தார்.

உக்ரைன் ரஷ்யா போரினால் மலேசியாவிற்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படவில்லை எனவும் மலேசியாவில் படிக்கும் இந்திய மாணவர்கள் சொந்த நாட்டிற்கு திருப்பி அனுப்பப்பட வில்லை எனவே மலேசியாவில் படிக்கும் இந்திய மாணவர்களை பற்றி அச்சப்படத் தேவையில்லை என்றும் அவர்தெரிவித்தார்.

Tags:    

Similar News