பெரம்பலூர் கலெக்டர் அலுவலகம் முன் நரிக்குறவர்கள் திடீர் போராட்டம்

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் நரிக்குறவர்கள் திடீர் என போராட்டம் நடத்தினார்கள்.

Update: 2021-09-27 12:11 GMT

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம்  முன் நரிக்குறவர்கள்  தர்ணா செய்தனர்.

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம் 36. எறையூர் கிராமத்தில் நரிக்குறவ இன மக்கள் வசித்து வருகின்றனர்.  நரிக்குறவர்களின் வாழ்வாதாரத்திற்காக 1977 ஆம் ஆண்டு 150 குடும்பங்களுக்கு தலா 2 ஏக்கர் வீதம் 300 ஏக்கர் நிலம் கொடுக்கப்பட்டு அந்நிலத்தில் விவசாயம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் 1984 ஆம் ஆண்டு முதல் தங்களுக்கு கொடுக்கப்பட்ட நிலத்திற்கு பட்டா கேட்டு பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்திலையில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு ஜவுளி பூங்கா அமைக்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் விளை நிலங்களை விட்டுச் செல்லும் படி உத்தரவு விட்டது. தொடர்ந்து பட்டா கேட்டா போராட்டங்களை நடத்தி வந்த நரிக்குறவர்கள் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்தனர்.

அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் வாயிற் கதவு முன்பு நரிக்குறவர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர். இதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து வெளியேயும், உள்ளேயும்  வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் , வருவாய்த்துறையினர் பேச்சுவார்த்தையின் அடிப்படையில் போராட்டம் கைவிடப்பட்டது இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது

Tags:    

Similar News