இல்லம் தேடி வரும் நடமாடும் சிறப்பு மருத்துவ முகாம் வாகனங்கள் தொடக்கம்

இல்லம் தேடி வரும் நடமாடும் சிறப்பு மருத்துவ முகாம் வாகனங்கள் தொடங்கி வைக்கப்பட்டது.

Update: 2021-11-13 14:28 GMT

பெரம்பலூர் மாவட்டத்தில் நடமாடும் மருத்துவ வாகனம் தொடங்கி  வைக்கப்பட்டது.

பெரம்பலூர் மாவட்ட பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பில் மழைக்கால நடமாடும் 15 சிறப்பு மருத்துவ வாகனங்களை பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் எம்.பிரபாகரன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலையில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஸ்ரீ வெங்கட பிரியா பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறையின் மூலம் மழைக்கால நடமாடும் சிறப்பு மருத்துவ முகாம் வாகனத்தை கொடியசைத்து துவக்கி வைத்தார்.

இதில் 15 மருத்துவ அலுவலர்கள், 15 செவிலியர்கள்,15 மருந்தாளுனர்கள், 4 ஆய்வக வல்லுநர்கள் கொண்ட குழுவினர் சார்பில் 45 மருத்துவ முகாம்கள் நடத்தப்படுகிறது. இதில் ரூ.2.50 லட்சம் மதிப்புள்ள மருந்து, மாத்திரைகள் பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது.

இந்த நிகழ்ச்சியில் , மாவட்ட சுகாதாரப்பணிகள் இணை இயக்குனர் செந்தில் குமார் , நகராட்சி ஆணையர் குமரி மன்னன் உள்ளிட்ட அரசுத் துறை அலுவலர்கள் சுகாதார பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News