அரசுப்பேருந்தில் பயணம் செய்த சட்டமன்ற உறுப்பினர்.

பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் எம்.பிரபாகரன் அரசுப்பேருந்தில் பயணம் செய்து மகளிர் மற்றும் பயணிகளிடம் குறைகளை கேட்டறிந்தார்.

Update: 2021-07-04 18:17 GMT

பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் எம்.பிரபாகரன் அரசுப்பேருந்தில் பயணம் செய்த மூதாட்டியிட்டம்  குறைகளை கேட்டறிந்தார்.

பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் எம்.பிரபாகரன் அரசுப்பேருந்தில் பயணம் செய்து மகளிர் மற்றும் பயணிகளிடம் குறைகளை கேட்டறிந்தார்.

பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் எம். பிரபாகரன் பூலாம்பாடி செல்லும் அரசுப்பேருந்தில் கோணேரிப்பாளையம் வரை திடீரென பயணம் செய்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ள மகளிர் இலவச பயண வசதியில் ஏதாவது குறைகள் உள்ளதா என்று மகளிர்களிடம் கேட்டறிந்தார்.

பேருந்தில் பயணம் செய்த பயணிகளிடமும் குறைகளை கேட்டறிந்தார். அதன் பிறகு வி.களத்தூர் கிராமத்தில் இருந்து பெரம்பலூர் நோக்கி வந்த நகரப்பேருந்தில் எசனை நார்க்காரன் கொட்டாய் பேருந்து நிறுத்தத்தில் இருந்து ஏறிய சட்டமன்ற உறுப்பினர், அதில் பயணம் செய்த

பெரம்பலூர் எடத்தெரு பகுதியைச் சேர்ந்த செல்லம்மாள் என்பவரிடம் முதியோர் உதவித்தொகை சரியாக வருகிறதா என்று கேட்டறிந்தார். அதே பேருந்தில் பயணம் செய்த வேப்பந்தட்டை தாலுக்கா,என புதூர் கிராமத்தைச் சேர்ந்த

சின்னம்மாள் என்பவர் முதியோர் உதவித்தொகை வரவில்லை என்று சட்டமன்ற உறுப்பினரிடம் கூறினார். உடணடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று சட்டமன்ற உறுப்பினர் கூறினார்.

Tags:    

Similar News