அரசால் தடைசெய்யப்பட்ட கஞ்சா விற்பனை செய்த நபர் கைது

அரசால் தடைசெய்யப்பட்ட கஞ்சா விற்பனை செய்த நபரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-10-16 17:46 GMT

பெரம்பலூரில் கஞ்சா வியாபாரி கைது செய்யப்பட்டார்.

பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ச.மணி உத்தரவின்படி அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா விற்பவர்களை கண்டறியும் பொருட்டு சிறப்பு ரோந்து அலுவல் மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில் மங்களமேடு காவல் நிலைய உதவி ஆய்வாளர் செந்தமிழ்செல்வி தனது நிலைய காவலர்களுடன் ரோந்து அலுவலில் இருந்த போது அவருக்கு கிடைத்த இரகசிய தகவலின்படி கீழப்புலியூர் ஒயின்ஷாப் எதிரே உள்ள அரசமரத்து அருகே சென்று பார்க்கும்போது அங்கு ஒரு நபர் கையில் பையுடன நின்று கொண்டிருந்தார்.

மேற்படி நபர் வைத்திருந்த பிளாஸ்டிக் பையை சோதனையிட அதில் அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா இருந்தது.

பின்னர் விசாரிக்க அவர் பெயர் குமார் (42), , தெற்குவீதி காட்டுகொட்டகை, சிறுமத்தூர் குடிக்காடு, கீழப்புலியூர், குன்னம் வட்டம், பெரம்பலூர் மாவட்டம் என கூறினார். மேற்படி நபரையும் அவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட சுமார் 4000 மதிப்புள்ள 250 கிராம் கஞ்சாவையும் காவல் துறையினர் கைப்பற்றினர்.

மங்களமேடு வட்ட காவல் நிலைய ஆய்வாளர் ஜெயலட்சுமி மேற்படி நபர் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தார்

Tags:    

Similar News