24 மணி நேரமும் ரோந்து பணியில் ஈடுபடும் "காவலர் பீட்" துவக்கம்

காவலர்கள் இருசக்கர வாகனத்தில் 24 மணி நேரமும் ரோந்து பணியில் ஈடுபடும் "காவலர் பீட்" முறையை பெரம்பலூரில் டிஐஜி துவக்கி வைத்தார்.

Update: 2021-10-02 05:00 GMT

பெரம்பலூர் மாவட்டத்தில் பகல் மற்றும் இரவு என 24 மணி நேரமும் இருசக்கர வாகனத்தில் காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபடும் வகையில் காவலர் பீட் முறையை பெரம்பலூர் மாவட்ட காவல் அலுவகத்தில் திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவர் சரவணசுந்தர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

9 இருசக்கர வாகனங்கள் காவலர்கள் சுழற்சிமுறையில் இரவு பகல் என 24 மணி நேரமும் ரோந்து பணியில் ஈடுபடுவர். இவர்களை வழக்கமான 100 எண்ணில் தொடர்பு கொண்டு புகார்களை தெரிவிக்கலாம். மேலும் காவல் நிலையம் போகாமல் ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களிடம் புகார்களை தெரிவித்தாலும் புகார் தொடர்பான விசாரணையை மேற்கொள்வார்கள். மேலும் குற்றங்களை தடுக்கும் வகையிலும் பொதுமக்களுடன் நட்புறவு ஏற்படுத்தும் வகையிலும் காவலர் பீட் என்ற முறை தற்போது நடை முறைப்படுத்த படுவதாக தெரிவித்துள்ளனர்.

இந்நிகழ்ச்சியின் போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணி, மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஆரோக்கிய பிரகாசம், பெரம்பலூர் சரக மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் சஞ்சிவ்குமார், மங்கலமேடு சரக துணை காவல் கண்காணிப்பாளர் சுஜாதா, பெரம்பலூர் நகர காவல் ஆய்வாளர் முருகேசன் உள்ளிட்ட காவலர்கள் பலர் உடனிருந்தனர்.

Tags:    

Similar News