விநாயகர் சதுர்த்தி விழா நடத்த அனுமதி வழங்க கோரி நூதன முறையில் வழிபாடு

தேங்காயில் தீபம் ஏற்றி அதை கோயில் வாசலில் உடைத்து விநாயகரிடம் முறையீடு செய்து நூதன வழிபாடு நடத்தினர்

Update: 2021-09-02 10:34 GMT

பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள விநாயகர் கோயிலில் வழிபாடு நடத்திய இந்து முன்னணியினர்

விநாயகர் சதுர்த்தி விழா நடத்த அனுமதி வழங்க கோரி, இந்து முன்னணி சார்பில் கோயில்களில் முறையீடு நூதன வழிபாடு நடைபெற்றது. கொரோனா தொற்று காரணமாக, இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.  இதனிடையே தமிழகம் முழுவதும் இந்து முன்னணி சார்பில் திருக்கோயில்களில் முறையீடு நூதன முறையில் வழிபாடு நடைபெற்றது. 

பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள விநாயகர் கோயிலில், இந்து முன்னணி சார்பில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கஜேந்திரன் தலைமையில், தேங்காயில் தீபம் ஏற்றி தேங்காய் உடைத்து  முறையீடு செய்து, நூதன வழிபாடு நடத்தினர். இந்த நிகழ்வில், கண்ணன், கரிகரண், மையூரி பிரியன் உட்பட இந்து முன்னணி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News