இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்

100 நாள் வேலை திட்ட பணியாளர்களை சாதி ரீதியாக பிரித்து வேலை மற்றும் சம்பளம் வழங்கும் மத்திய அரசின் திட்டத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.

Update: 2021-06-21 11:42 GMT

சாதி ரீதியாக பிரித்து வேலை மற்றும் சம்பளம் வழங்கும்  திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் பெரம்பலூரில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். 

100 நாள் வேலை திட்ட பணியாளர்களை சாதி ரீதியாக பிரித்து வேலை மற்றும் சம்பளம் வழங்கும் வகையில் மத்திய அரசு கொண்டுவரவுள்ள திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் பெரம்பலூரில் ஆர்ப்பாட்டம்.

100 நாள் வேலை திட்ட பணியாளர்களை சாதி ரீதியாக பிரித்து வேலை மற்றும் சம்பளம் வழங்கும் வகையில் மத்திய அரசு புதிய திட்டம் கொண்டுவரவுள்ளது, இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் மற்றும் தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் நாடு தழுவிய போராட்டம் நடத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் இதே கோரிக்கையை வலியுறுத்தி பெரம்பலூர் மாவட்ட அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பிலும், தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் சார்பிலும் அதன் மாவட்ட செயலாளர் ரமேஷ் தலைமையில் பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் பகுதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மத்திய அரசின் இந்த திட்டத்திற்கு எதிராக முழக்கமிட்டனர். தொடர்ந்து பேசிய அவர்கள் 100 நாள் வேலைத்திட்டத்தில் சாதி ரீதியாக வேலை வழங்குவது மற்றும் சம்பளம் வழங்குவது போன்ற திட்டத்தை கைவிட வேண்டும் இதனால் கிராமப்புறங்களில் மிகப்பெரிய அளவிலான ஜாதி மோதல்கள் ஏற்படும் மேலும் 100 நாள் வேலை திட்டத்தில் அனைவருக்கும் 200 நாட்கள் வேலை வழங்க வேண்டும் சட்டப்படியான சம்பளம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை மத்திய அரசை கண்டித்து கண்டன கோஷங்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து இதே கோரிக்கையை வலியுறுத்தி பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீ வெங்கட பிரியாவிடம் அவர்கள் கோரிக்கை மனு அளித்தனர்..

Tags:    

Similar News