பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை திட்டங்களுக்கான ஆண்டு வருமான உச்சவரம்பு அதிகரிப்பு

தமிழக அரசு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கான ஆண்டு வருமான உச்சவரம்பு ரூ.1,00,000-ஆக உயர்த்தியுள்ளது.

Update: 2022-01-24 17:45 GMT

பைல் படம்.

பெரம்பலூர் மாவட்டம் தமிழக அரசு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கான ஆண்டு வருமான உச்சவரம்பு ரூ.72,000-லிருந்து ரூ.1,00,000-ஆக உயர்த்தியுள்ளது மாவட்ட ஆட்சியர் ப.ஸ்ரீவெங்கட பிரியா தெரிவித்துள்ளார்.

பிற்படுத்தப்பட்ட, மிகப்பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் (பி.சி, எம்.பி.சி, டி.என்.சி) வகுப்பைச் சார்ந்த மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்த தமிழக அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. சுயதொழில் செய்து வாழ்வாதாரத்தை மேம்படுத்திட மின்மோட்டாருடன் கூடிய விலையில்லா தையல் இயந்திரம், பித்தளை தேய்ப்புப்பெட்டி ஆகியன வழங்கப்படுகின்றன. வீடற்ற ஏழை பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மக்கள் வீடு கட்டிக்கொள்ள ஏதுவாக அவர்களுக்கு இலவச வீட்டுமனைப்பட்டா வழங்கப்படுகிறது.

மேற்படி திட்டங்களின் கீழ் பயன்பெற பயனாளிகளின் ஆண்டு வருமான உச்சவரம்பினை ரூ.72,000-லிருந்து ரூ.1,00,000- ஆக உயர்த்தி தமிழக அரசால் உத்தரவிடப்பட்டுள்ளது. எனவே மேற்படி திட்டங்களில் பயன்பெற விரும்புவோர் உரிய சான்றுகளுடன் விண்ணப்பித்து பயன்பெறலாம். மேலும், விவரங்களுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தினை அணுகி பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் ஸ்ரீவெங்கட பிரியா தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News