கல்வியில் சிறந்து விளங்கிய மாணவ மாணவிகளுக்கு ஊக்கத்தொகை

கல்வியில் சிறந்து விளங்கிய மாணவ மாணவிகளுக்கு கரம் கொடுத்து ஊக்கத்தொகை வழங்கி பாராட்டிய நம்மால் முடியும் நண்பர்கள் குழு.

Update: 2021-07-28 17:15 GMT

கல்வியில் சிறந்து விளங்கிய மாணவ, மாணவிகளுக்கு கரம் கொடுத்து ஊக்கத்தொகை வழங்கி பாராட்டிய நம்மால் முடியும் நண்பர்கள் குழு.

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டம், நாட்டார் மங்கலம் கிராமத்தில் உள்ள நம்மால் முடியும் நண்பர்கள் குழு மரம் நடுதல், ஆதரவற்றவர்களுக்கு உதவுவதல் உள்ளிட்ட பல்வேறு நலப்பணிகளை செய்து வருகின்றனர். இதனிடையே செட்டிகுளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 2020-2021 கல்வி ஆண்டில் 12ம் வகுப்பு தேர்வில் பள்ளி அளவில் சிறப்பிடம் பெற்ற மாணவர்கள் முறையே  வான்மதி, ரஞ்சனி, கிருபாகரன் ஆகிய மாணவர்களுக்கு நம்மால் முடியும் நண்பர்கள் குழுவினர் ஊக்கத் தொகை வழங்கி கெளரப்படுத்தினர்.

பள்ளியில் நடைபெற்ற இதற்கான நிகழ்வில் பள்ளி தலைமையாசிரியர் நாகமணி மாணவ-மாணவிகளுக்கு ஊக்கத் தொகையான ரூ 2,000, ரூ 1500 மற்றும் ரூ 1000 தொகையினை பாராட்டினார். இந்த நிகழ்வில் உதவி தலைமையாசிரியர் ராதாகிருஷ்ணன்,சக ஆசிரியர்கள், செட்டிகுளம் ஊராட்சி மன்றத் தலைவர் கலாதங்கராசு, நம்மால் முடியும் நண்பர்கள் குழுவை சேர்ந்த விஜய்அரவிந்த், விக்னேஷ், விஷ்ணுகோபால், நவீன், அபிநாத், கமலேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News