பெரம்பலூரில் 4 மணி நேரமாக கனமழை குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் புகுந்தது

பெரம்பலூரில் 4 மணி நேரமாக கன மழை பெய்தது. குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் புகுந்தது. இதனால் பொதுமக்கள் அவதியடைந்தனர்.

Update: 2021-11-25 17:15 GMT

பெரம்பலூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது நெடுவாசல் கிராமத்தில் ஏரிகள் அதிகளவு தண்ணீர் வந்ததால் அருகில் இருக்கும் குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் சூழ்ந்தது மக்கள் தவிப்பு

பெரம்பலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தொடர் கன மழை, குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் புகுந்தது பொதுமக்கள் அவதியடைந்தனர்.

பெரம்பலூர் மாவட்டத்தில் நவம்பர் 25ஆம் தேதி இன்று காலை முதல் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வந்த நிலையில் பகல் 12 மணிக்கு மேல் வானில் மேக மூட்டம் சூழ்ந்து காணப்பட்ட நிலையில், மழை பெய்யத்துவங்கியது.

அவ்வப்போது விட்டு விட்டு பெய்த மழை மாலை சுமார் 4 மணி அளவில் பெய்யத் தொடங்கிய கனமழை, இடி மின்னலுடன் இடைவிடாது தொடர்ந்து பெய்து வருகிறது,

இதனால் மழை நீர் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது மேலும் தாழ்வான பகுதிகளில் குடியிருப்போர் வீடுகளிலும் தண்ணீர் புகுந்தது இதில், பெரம்பலூர் அண்ணா நகர் ,இந்திரா நகர், துறையூர் சாலை, அரசு குடியிருப்பு, துறைமங்கலம், 4ரோடு சாலை ஆகிய பகுதியில் உள்ள குடியிருப்பு வீடுகளில் தண்ணீர் புகுந்தது இதனால் வீட்டில் குடியிருப்பவர்கள் மிகுந்த சிரமம் அடைந்தனர், உணவு உடை போன்ற அத்தியாவசியத் பொருட்கள் நீரில் மூழ்கின.

மேலும் நெடுவாசல் கிராமத்தில் உள்ள ஏரி நிரம்பி தண்ணீர் அதிக அளவில் வெளியேறிக் கொண்டிருப்பதால் நீர்வழிப் பாதை அருகில் குடியிருப்பு பகுதியில் தண்ணீர் புகுந்தது இதனால் அப்பகுதி மக்கள் செய்வதறியாமல் தவித்து வருகின்றனர்.

பெரம்பலூர் மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் கனமழை பெய்ததால் பல்வேறு இடங்களில் மழைநீர் தாழ்வான பகுதி குடியிருப்புகளில் செல்லும் நிலை இருந்து வருகிறது,

இதில் மின் நிறுத்தம் செய்யப்பட்டதால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். தொடர் மழை குறைந்தால் மட்டுமே தண்ணீர் வடியும் என்ற சூழ்நிலை உருவாகி உள்ளது.

Tags:    

Similar News