தஞ்சாவூர் முதல் சேலம் வரை புதிய வழி தடத்தில் அரசு பேருந்து துவக்கி வைத்த அமைச்சர்

Salem to Thanjavur Bus-தஞ்சாவூர் முதல் சேலம் வரை இயக்கப்படும் அரசு பேருந்தை பிற்படுத்தபட்ட நல துறை அமைச்சர் சிவசங்கர் கொளக்காநத்தம் ஊராட்சியில் இன்று துவக்கி னவத்தார்.

Update: 2021-08-12 17:42 GMT

Salem to Thanjavur Bus

Salem to Thanjavur Bus-தஞ்சாவூர் முதல் சேலம் வரை அரசு பேருந்து இயக்க பொதுமக்கள் கோரிக்கை வைத்து இருந்தனர். இதனை ஏற்ற அரசு அரியலூர் முதல் சேலம் வரை செல்லும் புதிய வழிதடத்தில் , தஞ்சாவூர், அரியலூர், கொளக்காநத்தம், செட்டிகுளம் துறையூர், நமக்கல்,வழியாக, சேலம் வரை செல்லும் பேருந்துக்கு அனுமதி அளித்தது.

தமிழக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ். எஸ். சிவசங்கர்  கொளக்காநத்தம் ஊராட்சியில் இருந்து இன்று புதிய பஸ்சை  கொடியசைத்து துவக்கி வைத்தார்.

தினமும் அதிகாலை 4.30 மணிக்கு அரியாலூர் பேருந்து நிலையத்தில் இருந்து புறப்பட்டு தஞ்சாவூர் சென்று அங்கிருந்து கொளக்காநத்தம் வழியாக செல்லும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட பேருந்து 292 கிலோமீட்டர் பயணம் செய்து சோலம் வரை செல்ல உள்ளது,

இதனை அடுத்து புது குறிச்சிதுணை மின் நிலையத்தில் இருந்து கொளக்காநத்தம் வரை 73 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட புதிய மின் வழிப்பாதையை துவக்கி வைத்தார்,

இதனைத் தொடர்ந்து கொளக்காநத்தம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூபாய் 48 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் படுக்கை வசதியுடன் கூடிய புதிய கட்டிடத்திற்கான பூமிபூஜை துவக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சி ஆலத்தூர் ஒன்றிய பெருந்தலைவர் கிருஷ்ணமூர்த்தி,உள்ளிட்ட போக்குவரத்து துறை அதிகாரிகள் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Tags:    

Similar News