பெரம்பலூர் அருகே உரிய ஆவணம் இன்றி எடுத்துச் சென்ற பணம் பறிமுதல்

பெரம்பலூர் அருகே உரிய ஆவணம் இன்றி இருசக்கர வாகனத்தில் எடுத்துச் சென்ற ரூ. 58,230 பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்

Update: 2022-02-14 03:15 GMT

பறிமுதல் செய்த பணத்தை  குரும்பலூர் பேருராட்சி தேர்தல் நடத்தும் அலுவலர் மெர்சியிடம் ஒப்படைத்த பறக்கும் படையினர் 

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன்படி பெரம்பலூர் துறையூர் சாலையில் குரும்பலூர் அரசு கலை கல்லூரி அருகே தேர்தல் பறக்கும் படையினர் வட்டாட்சியர் பழனி செல்வன் தலைமையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டபோது, அவ்வழியே இருசக்கர வாகனத்தில் வந்த வந்த செஞ்சேரி கிராமத்தைச் சேர்ந்த கார்த்திக் என்பவரிடம் சோதனையிட்டனர்.

சோதனையில் கார்த்திக் உரிய ஆவணங்களின்றி ரூ. 58,230 ரூபாய் பணம் கொண்டு வந்தது தெரிய வந்தது. அதற்கு உரிய ஆவணம் இல்லாதால் அந்த பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்து குரும்பலூர் பேருராட்சி தேர்தல் நடத்தும் அலுவலர் மெர்சியிடம் ஒப்படைத்தனர்.

Tags:    

Similar News