பெரம்பலூர் மாவட்ட மக்களுக்கு தண்டோரா மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை

மருதையாற்று வெள்ளத்தினால் பெரம்பலூர் மாவட்ட மக்களுக்கு தண்டோரா மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

Update: 2021-11-26 17:40 GMT

மருதையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் தண்டோரா மூலம் எச்சரிக்கை விடப்பட்டது.

பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று பிற்பகல் முதல் தற்போது வரை விட்டு விட்டுமழைபெய்து வருகிறது.இதனிடையே மருதையாறு நீர்ப்பிடிப்பு பகுதிகளில் நேற்றிரவு கனமழை பெய்ததால் மருதையாற்றில் வெள்ளநீர் கரைபுரண்டு ஓடுகிறது.ஏற்கனவே பெய்த மழையில் கொட்டரை மருதையாறு நீர்த்தேக்கம் நிரம்பிவிட்டதால் தற்போதுசெல்லும் நீர் உபரிநீர் போக்கிவழியாக அப்படியே வெளியேறிவருகிறது.

சுமார் 4500 கன அடிநீர் வெளியேற்றப்பட்டு வருவதால் இருகரையோர மக்கள் பாதுகாப்புடனும் எச்சரிக்கையுடனும் இருக்குமாறு மாவட்ட ஆட்சியர் ஸ்ரீவெங்கடபிரியா கேட்டுக்கொண்டுள்ளார்.மேலும் ஆற்றை கடக்கவோ,அருகில் செல்லவோ வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளார்.

அதனை தொடர்ந்து கரையோர பகுதியில் உள்ள கிராமங்களில் தண்டோராமூலம் பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.இதனிடையே மருதையாறு நீர்த்தேக்கத்திற்கு வரும் நீரின் அளவை பொதுப்பணித்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

Tags:    

Similar News